






























ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்
Updated on
:
1 min read
மும்பை: டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்குக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டம் நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் 223 ரன்களை வெற்றிகரமாக எட்டி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தின் போதுதான் தனது செயலால் சர்ச்சையில் சிக்கினார் ரியான் பராக்.
இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ரியான் பராக், இ-சிகரேட் புகைத்தார். அந்த காட்சி கேமராவில் பதிவானது. தொடர்ந்து அது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அவரது இந்த செயலை பலர் கண்டித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து போட்டியின் கள நடுவர்கள், போட்டியின் நடுவரிடம் தெரிவித்தனர். அதன் பேரில் வீடியோ காட்சிகளின் ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் நடுவர்.
ரியான் பராக் இ-சிகரெட் புகைத்தது உறுதி செய்யப்பட்டது. இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.21-ஐ மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் அவருக்கு போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。