惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
腾讯CDC
A
About on SuperTechFans
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
D
DataBreaches.Net
D
Docker
宝玉的分享
宝玉的分享
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
博客园 - 三生石上(FineUI控件)
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
Hugging Face - Blog
Hugging Face - Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரளத்தில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ நோய் தொற்று எதிரொலி - கண...
ஒய்.டேவிட் ராஜா · 2026-06-21 · via hindutamil

ஷிகெல்லா பாட்டீரியா மாதிரி படம்

Updated on: 

மதுரை: கேரளத்தில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று எதிரொலியாக மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கேரளாவில் வேக மாகப் பரவி வருகிறது. இது அசுத்தமான உணவு, குடிநீர், சுகாதாரமற்ற சூழல், பாதிக்கப்பட்டவர்கள் மூலம் பரவும் குடல் நோயாகும். கோழிக் கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தொற்று, மனிதர்களின் குடலை தாக்கி கடுமையான வயிற்றுப் போக்கு, தீவிர உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் ஒரு ஆபத்தான பாக்டீரியா ஆகும். இவை 10 முதல் 100 வரை எண்ணிக்கையில் உடலுக்குள் சென்றாலே எளிதில் தொற்றை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் சுகாதாரமாக இருந்தால், இந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக் கின்றனர்.

இது குறித்து மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டத்தில் இதுவரை ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இத்தொற்றில் இருந்து மக்களை காக்கவும், பாதிப்புகளைத் தடுக்கவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தீவிர கண் காணிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

கடுமையான வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்காக மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. நீர்ச்சத்து குறை பாட்டைத் தடுக்க ஓ.ஆர்.எஸ். கரைசல்கள், குளுக் கோஸ் ஆகியவை கையிருப்பில் உள்ளன.

பாக்டீரியாவை துல்லியமாக கண்டறிய மலம், ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், காய்ச்சிய நீரைப் பருகுதல் போன்ற சுகாதார விழிப்புணர்வை மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கி வருகிறோம். குறிப்பாக, குழந்தைகள், முதியோர் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். இந்த நோய் அறிகுறிகள் தென் பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.