惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 【当耐特】
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
H
Help Net Security
爱范儿
爱范儿
罗磊的独立博客
博客园_首页
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் அதிகாரிக்கு அதிகாரமில்லை: பெர...
2026-05-12 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ‘தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட பிறகு, தொகுதி மாறி அனுப்​பப்​பட்ட தபால் வாக்கை மீட்டு மறு எண்​ணிக்கை நடத்த தேர்​தல் அதி​காரிக்கு அதி​காரமில்​லை’ என உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் விளக்​கமளித்​துள்ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகுதி திமுக வேட்​பாள​ரான முன்​னாள் அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்​பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தவெக வேட்​பாளர் சீனி​வாச சேதுப​தியிடம் தோல்​வியடைந்​தார் அதையடுத்து மறு​வாக்கு எண்ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்லை என அவர் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், “எனது தொகு​திக்கு பதி​வான ஒரு தபால் வாக்கை அதி​காரி​கள் தவறு​தலாக வேலூர் அரு​கே​யுள்ள திருப்​பத்​தூர் தொகு​திக்கு மாற்றி அனுப்பி விட்​டனர்.

எனவே அந்த தபால் வாக்கை மீட்டு மறு எண்​ணிக்கை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும், அது​வரை சீனி​வாச சேதுபதி சட்​டப்​பேர​வை​யில் நடை​பெறும் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பங்​கேற்க தடை விதிக்க வேண்​டும்” என கோரி​யிருந்தார்.

இந்த வழக்கை ஞாயிறன்று விசா​ரித்த நீதிப​தி​கள் எல்​.விக்​டோரியா கவுரி, என்​.செந்​தில்​கு​மார் அமர்வு, இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் விளக்​கமளிக்க உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி இந்த வழக்​கில் தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தாக்​கல் செய்​துள்ள பதில்​மனு​வில், “தேர்​தல் முடிவுக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்​கு​தான் தொடர முடி​யும்.

அந்த தேர்​தல் வழக்கை விசா​ரிக்கும் உயர்நீதி​மன்​றம்​தான் அத்​தொகு​தி​யின் தேர்​தல் வெற்றி செல்​லுமா, செல்​லாதா என்​பதை தீர்​மானிக்​கும். அதைத் தவிர்த்து ரிட் வழக்கு தொடர்ந்து இதற்கு பரி​காரம் தேட முடி​யாது.

இதை மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​ட​மும், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களும் உறுதி செய்​துள்ளன. சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​திக்கு பதி​வான தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படும் குற்​றச்​சாட்​டுக்கு எந்த ஆதா​ர​மும் இல்​லை.

மேலும் தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு ஒரு தொகு​தி​யில் எண்​ணப்​பட்ட தபால் வாக்கை வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​க​வும் முடி​யாது.

அதே​போல தேர்​தல் முடிவு அறிவிக்​கப்​பட்ட பிறகு வேறு தொகு​திக்கு அனுப்​பப்​பட்ட தபால் வாக்கை மீட்​டு, மறு எண்​ணிக்கை நடத்​தக் கோரும் மனு மீது முடி​வெடுக்க சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் அதி​காரிக்​கும் அதி​காரம் இல்​லை.

ஒரே பெயர் கொண்ட தொகு​தி​களுக்​கான வாக்​கு​களை கையாளும்​போது தேர்​தல் அதி​காரி​கள் மிகுந்த எச்​சரிக்கை உணர்​வுடன் செயல்பட ஏற்​கெனவே அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன் காரண​மாகவே தபால் வாக்​கு​களில் தொகுதி எண் குறிப்​பிடப்பட்டு சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களுக்கு அனுப்பி வைக்​கப்​படு​கின்​றன. தபால் வாக்கு வேறு தொகு​திக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கற்​பனை​யாக கூறப்​படும் குற்​றச்​சாட்டு அடிப்​படை ஆதா​ரமற்​றது.

எனவே இந்த வழக்கை அபராதத்​துடன் தள்​ளு​படி செய்ய வேண்​டும்” எனக் கோரப்​பட்​டிருந்​தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலனும், பெரியகருப்பன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளி​வைத்​துள்​ளனர்​.