惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
H
Help Net Security
Jina AI
Jina AI
T
The Blog of Author Tim Ferriss
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗
Y
Y Combinator Blog
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
C
Check Point Blog
Recent Announcements
Recent Announcements
IT之家
IT之家
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
雷峰网
雷峰网
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
S
SegmentFault 最新的问题
MyScale Blog
MyScale Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
Visual Studio Blog
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர் - பெரியபாளையம் வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்கள்.

Updated on: 

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அருகே உள்ள தனி​யார் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயு கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 2 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த நிலை​யில், சிகிச்சை பலனின்றி நேற்று மேலும் 6 பெண்​கள் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை 8 ஆக உயர்ந்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் பெரிய​பாளை​யம் அடுத்த கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் உள்ள ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற நிறு​வனம், இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்து வரு​கிறது. இங்கு 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் பணி​யாற்றி வந்​தனர்.

கடந்த 21-ம் தேதி காலை 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அமோனியா வாயு தொட்​டி​யில் இருந்து குளிர்​சாதனப் பிரிவுக்கு செல்​லும் குழா​யின் வால்வு பகு​தி பெரும் சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாயு கசிவு ஏற்​பட்​டது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை​யின் முதல்​தளம் முழு​வதும் அமோனியா வாயு பரவியது.

இதனால், பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் மற்​றும் அரு​கில் உள்ள தங்​குமிடங்​களில் தூங்​கிக் கொண்​டிருந்த பெண் தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட 77 பேர் மயக்​கம் அடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல், வாய் மற்​றும் மூக்​கில் ரத்​தக்​கசிவு போன்ற பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன. வாயுவின் நச்சுத்தன்மை காரணமாக பலர் குளியலறை பகுதிக்கு சென்று மயங்கி கிடந்தனர். இதனால் பதற்​ற​மான சூழல் உரு​வானது.

பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வரு​வாய்த் துறை அதி​காரி​கள் மற்​றும் நிறுவன ஊழியர்​கள் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பிற வாக​னங்​கள் மூலம் மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகியோர் உயி​ரிழந்​தனர். மற்​றவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி ஷிபானி (22), திலோமினி (20), கீதா ஜுங்கா (24), பர்​பாவதி ஜுங்கா (19), ஷம்​படி ஜுங்கா (23), பூர்​ணிமா ஜுங்கா (19) ஆகிய 6 பெண்கள் நேற்று உயி​ரிழந்​தனர். இதனால், உயி​ரிழப்பு எண்​ணிக்கை 8 ஆக அதி​கரித்​துள்​ளது. இவர்​கள் 8 பேரும் ஒடி​சாவைச் சேர்ந்​த பெண்​கள்.

தற்​போது 67-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பல்​வேறு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர்​களில் சிலரது நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​களை அமைச்​சர் ராஜீவ், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், விசிக தலை​வர் திரு​மாவளவன், காங்​கிரஸ் எம்​.பி. சசி​காந்த் செந்​தில் மற்​றும் ஒடிசா மாநில தொழிலா​ளர் நலத் துறை அதி​காரி​கள் சந்​தித்து ஆறு​தல் கூறினர். தொழிற்​சாலை​யில் இருந்த சுமார் 1.5 டன் அமோனியா வாயுவை பாது​காப்​பாக அகற்​றும் பணி​களும் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.