惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Vercel News
Vercel News
D
Docker
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
博客园 - 聂微东
小众软件
小众软件
Y
Y Combinator Blog
腾讯CDC
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தல் ஆணைய நெறிமுறை அறிந்து விஜய் கோரிக்கை வைத்திருக்கல...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையை அறிந்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தால் நியாயமாக இருக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர் வட்டம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்ட உயர்கல்வித் துறை அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளருமான கோவி.செழியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் சென்று வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடிய விகிதாசாரத்தை பார்வையிட்டு வருகிறேன்.

5 ஆண்டு காலம் திமுக செய்த பணிகள், திமுகவின் தேர்தல் அறிக்கை கிராமப்புறங்களில் பிரதிபலிப்பதை பார்த்து வருகிறோம் அனைத்து தரப்பு மக்களும் திமுக தொடர வேண்டும் என கருதுகிறார்கள். திமுக வெற்றி, வாக்குப்பதிவின்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது. திருவிடைமருதூர் தொகுதியில் முழு நிறைவாக வாக்குப்பதிவு நடப்பதற்கு திமுக கூட்டணி களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்" என்றார்.

பின்னர், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்குப்பதிவிற்கு 2 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கி தர வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்” என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் விதிமுறைகளை நன்றாக புரிந்தவர்கள், அறிந்தவர்கள் அதற்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும்.

இன்று காலையில் நினைத்து, மதியம் சொல்லி மாலையில் மாற்றுவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் இல்லை. அரசியல் விபரம் புரிந்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை புரிந்தவர்கள், கடந்த கால தேர்தல் நெறிமுறைகளை தெரிந்தவர்கள், இப்படிச் சொல்வதற்கு வாய்ப்பில்லை.

மாலை 6 மணிக்கு மேல் வாக்களிப்பவர்களுக்கு டோக்கன் வழங்கி தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உரிய நெறிமுறையை நன்றாக பார்த்து, அறிந்து புரிந்து நடிகர் விஜய் அந்தக் கோரிக்கையை வைத்தால் நியாயமாக இருக்கும் என்றார் அவர்.