惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The Cloudflare Blog
U
Unit 42
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
V
Visual Studio Blog
I
InfoQ
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
L
LangChain Blog
C
Check Point Blog
宝玉的分享
宝玉的分享
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மின்​மாற்​றிகள் கொள்​முதல் வழக்கு: செந்​தில் பாலாஜி உள்ளி...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மின்​மாற்​றிகள் கொள்​முதல் செய்​யப்​பட்​ட​தில் அரசுக்கு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட விவ​காரத்​தில் எம்​எல்ஏ செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான சிபிஐ விசா​ரணையை எதிர்த்து தாக்​கல் செய்யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுக்​களை உச்ச நீதி​மன்​றம் தள்ளு​படி செய்​துள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 2021-23 கால​கட்​டத்​தில் சுமார் 45 ஆயிரம் மின் மாற்​றிகளை கொள்​முதல் செய்​ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்​றும், எனவே இதற்கு காரண​மான முன்​னாள் மின்​வாரிய அமைச்​சரும், தற்​போதைய கோவை தெற்கு தொகுதி எம்​எல்​ஏ-வு​மான செந்​தில் பாலாஜி, டான்​ஜெட்கோ முன்​னாள் தலை​வ​ரான ராஜேஷ் லக்​கானி, மின்​வாரிய கொள்​முதல் பிரிவு நிதி கட்​டுப்​பாட்​டாள​ரான வி.​காசி ஆகியோர் மீதான குற்​றச்​சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்​புத்​துறை முறை​யாக விசா​ரணை நடத்​த​வில்​லை. எனவே இதுதொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக்​குழு அல்​லது சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் எனக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

அந்த வழக்​கு​களை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, கடந்த ஏப்​.29 அன்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு எதி​ரான புகார்​கள் மீது சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டிருந்​தனர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவை எதிர்த்து மின்​வாரிய முன்​னாள் தலை​வர் ராஜேஷ் லக்​கானி, கொள்​முதல் பிரிவு நிதி கட்​டுப்​பாட்​டாளர் வி.​காசி ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று நடந்​தது.

அப்​போது வி.​காசி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சித்​தார்த் தவே, ‘‘இந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை கோரப்​பட​வில்​லை.

இருப்​பினும் சென்னை உயர் நீதி​மன்​றம் சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட்​டுள்​ளது. அரசி​யல் உள்​நோக்​கத்​துடன் இந்த வழக்கு உயர் நீதி​மன்​றத்​தி்ல் தாக்​கல் செய்​யப்​பட்​டது’’ என்​றார்.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், ‘‘சிபிஐ விசா​ரணை வேண்​டும் என கோரப்​ப​டா​விட்​டாலும் தேவைப்​படும் பட்​சத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உயர் நீதி​மன்​றமே உத்​தர​விட முடி​யும். இந்த விவ​காரத்​தில் நாங்​கள் தலை​யிட விரும்​ப​வில்​லை. இருந்​த​போதும் சிபிஐ சுதந்​திர​மான விசா​ரணையை மேற்​கொள்ள வேண்​டும்’’ எனக்​கூறி காசி தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை தள்​ளு​படி செய்​தனர்.

அப்​போது டான்​ஜெட்கோ முன்​னாள் தலை​வர் ராஜேஷ் லக்​கானி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ்​.​நா​யுடு, தங்​கள் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை வாபஸ் பெற்​றுக்​கொள்​வ​தாக தெரி​வித்​தார். அதையேற்ற நீதிப​தி​கள், அந்த மேல்​முறை​யீட்டு மனுவை​யும் தள்​ளுபடி செய்து உத்​தரவிட்டனர்.