惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Vercel News
Vercel News
D
Docker
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
博客园 - 聂微东
小众软件
小众软件
Y
Y Combinator Blog
腾讯CDC
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான சவால்கள் என்னென்ன? - ...
வேட்டையன் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் வருவாய், கடன் குறித்த விவரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டது. இதே அறிக்கையில் 2026-27 நிதியாண்டுக்கான சவால்கள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

இடைக்கால வரவு-செலவுத் திட்டம் என்பது, தேர்தல் நடைபெறும் ஆண்டில் புதிய அரசு பொறுப்பேற்று திருத்த வரவு-செலவுத் திட்டத்தைச் தாக்கல் செய்யும் வரையில், இடைப்பட்ட காலத்திற்கான அத்தியாவசியச் செலவினங்களுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக, தாக்கல் செய்யப்படும் வருவாய் மற்றும் செலவினங்களின் நிதிநிலை அறிக்கை ஆகும். அரசின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள், குறிப்பிடத்தக்க புதிய வரி சீர்திருத்தங்கள் அல்லது கூடுதல் வருவாய் திரட்டுதல்கள் ஆகியவற்றை தவிர்ப்பதே இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இது, அடிப்படையில் இயல்பான செயல்பாட்டு நிலைக்கான ஓர் ஆண்டு நிதிநிலை அறிக்கையை பிரதிபலிக்கிறது.

2026-27 இடைக்கால வரவு செலவுத் திட்டம்: ஓர் ஆய்வு

வருவாய் வரவினங்கள்: மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2,29,579 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டிற்கான முதல்நிலைக் கணக்குகளின்படி, வருவாய் 192,493 கோடி ரூபாயாகும். தற்போதைய இயல்பான செயல்பாட்டு நிலையில் எவ்வித மாற்றமுமின்றி. 19 சதவீத வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சாத்தியமற்ற ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி விகிதம் முறையே 6.8 மற்றும் 7.7 சதவீதமாக இருந்துள்ளது.

இந்த வெள்ளை அறிக்கை, ஏற்கனவே தனது முந்தைய அத்தியாயங்களில் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாநில அரசின் வரி நிர்வாகத்தில் காணப்படும் கசிவுகளின் காரணமாக வரி வருவாய் ஈட்டும் திறனில் தொய்வடைந்துள்ளது. தற்போதுள்ள வரி விகிதங்களை மாற்றியமைக்காமலேயே இன்னும் கூடுதலான வருவாயை ஈட்டி சாதனை புரிந்திருக்க இயலும்.

வரி நிர்வாக குறைபாட்டின் காரணமாக இயல்பான செயல்பாட்டு நிலையின்படி இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் நியாயமான வளர்ச்சி விகிதம் சுமார் 8 சதவீதம் மட்டுமே இருக்க இயலும். மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஏறத்தாழ 208,000 கோடி ரூபாயாக இருக்கும். இதன் அடிப்படையில், இயல்பான செயல்பாட்டு நிலையில் மாநில சொந்த வரி வருவாய் 21,000 கோடி ரூபாய் வரையில் கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளது. 12 சதவீத வளர்ச்சி ஏற்படும் என நேர்மறையாகக் கருத்தில் கொண்டாலும், சொந்த வரி வருவாயில் 14,000 கோடி ரூபாய் கூடுதல் மதிப்பீடு அமைந்திருக்கும்.

2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி 26,373 கோடி ரூபாயாக இருந்த மாநில சொந்த வரியல்லாத வருவாய், 2026-27 ஆம் ஆண்டின் மதிப்பீட்டளவில் 27,704 கோடி ரூபாயாக உள்ளது. இது தற்போதைய இயல்புநிலை சூழலில் (BAU) ஓரளவிற்குச் சரியானதாகவே உள்ளது.

முதல்நிலைக் கணக்குகளின்படி 56,819 கோடி ரூபாயாக உள்ள மத்திய வரிகளின் பங்கீடு 10.1 சதவீத வளர்ச்சியைப் பெற்று, 62,531 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றிய மேற்கொள்ளும் நிதி ஒதுக்கீட்டை அப்படியே பிரதிபலிக்கிறது. இதனை மாற்றியமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. ஒன்றிய அரசின் பகிர்ந்தளிக்கப்படும் நிதிப் பகிர்வுத் தொகுப்பில் ஏற்படும் திரண்ட வரி ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப, இந்த வரவும் மாற்றத்திற்குட்படும்.

மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானியங்களுக்கான மதிப்பீடு, முதல் நிலை கணக்குகளின்படி 18,078 கோடி ரூபாயாக உள்ளது. இது, 24,762 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் 5,000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்பதை உள்ளடக்கியது. ஆனால், மானியங்களை விடுவிப்பதற்கு முன்நிபந்தனையாக மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ளும்போது, அதுவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப் பெறும் மானியங்கள் குறையும் என்பதை கணக்கில் கொள்ளாவிட்டாலும் கூட, மாநில சொந்த வரி வருவாயில் 12 சதவீத வளர்ச்சி காணப்படும் என நேர்மறையாக கணக்கில் கொண்டாலும், வருவாய் வரவுகள் சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் செலவினம்

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பணியாளர் சேர்க்கை மற்றும் இந்த அகவிலைப்படி உயர்வு ஆண்டு எதிர்பார்க்கப்படும் அதிக அளவிலான ஆகியவற்றைக் கணக்கில் கொண்ட பின்பு, 2025-26 ஆம் ஆண்டின் முதல்நிலைக் கணக்குகளின்படி 122,065 கோடி ரூபாயாக இருந்த சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள். தற்போதைய இயல்பான சூழலில், அச்செலவினங்களுக்கு 1,39,701 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது நியாயமானதாகக் கருதப்படுகின்றது.

‘உதவித்தொகைகளும் நிதி மாற்றங்களும்’ என்ற கணக்குத் தலைப்பின் கீழ், முதல்நிலைக் கணக்குகளின் படியான 1,62,536 கோடி ரூபாய் 2026-27 ஆம் ஆண்டு 1,56,108 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் மிக முக்கியமான சில விடயங்கள் விடுபட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16,000 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில், வருவாய் கணக்கிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இது முற்றிலும் விடுபட்டுள்ளது. மேலும், குறைவான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டதால் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்ட மொத்த இழப்புகளைக் குறிக்கும் ஒழுங்குமுறைச் சொத்துக்களை தீர்வுசெய்வதற்காக. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்குத் தொகை செலுத்த வேண்டியிருப்பதால், ஆண்டுதோறும் கூடுதலாக 11,800 கோடிரூபாய் செலவு ஏற்படும்.

இதன் காரணமாக, உதவித்தொகைகளும் நிதி மாற்றங்களும் 27,800 கோடி ரூபாய் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை

2025-26 ஆம் ஆண்டுக்கான திருத்த மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை 69.219 கோடி ரூபாயாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய முதல்நிலைக் கணக்குகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையை காட்டுகின்றன. 2025-26 ஆம் ஆண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை 48,696 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வருவாய் வரவுகளில் 14,000 கோடி ரூபாய் மிகை மதிப்பீட்டையும், வருவாய் செலவினங்களில் 27,800 கோடி ரூபாய் குறைவான மதிப்பீட்டையும் கருத்தில் கொள்ளும்போது, வருவாய் பற்றாக்குறை சுமார் 41,800 கோடி ரூபாய் அளவுக்குக் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழல் தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை சுமார் 90,500 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை

2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 1.24.007 கோடி ரூபாயாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்நிலைக் கணக்குகளின்படி அது 1,33,208 கோடி ரூபாயாக உள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது அவசியமாகிறது. 2026-27 ஆம் ஆண்டில், தற்போதை சூழல் தொடர்ந்தால், வருவாய் செலவினங்களில் உள்ள விடுபடல்கள், வருவாய் வரவுகளின் மிகை மதிப்பீடுகள் மற்றும் 2026-27 ஆம் ஆண்டிற்கு மட்டுமே உரிய முக்கிய செலவின இனங்களுக்கான மதிப்பீடு இல்லாதிருத்தல் ஆகிய காரணங்களால், 1,21,949 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையானது தற்போதைய சூழல் தொடர்ந்தால், 41,800 கோடி ரூபாய் வரை அதிகரித்து. சுமார் 1,63,750 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறைக்கான நிதியளிப்பு

நிதிப் பற்றாக்குறையானது. அந்த ஆண்டில் பெறப்படும் நிகர கூடுதல் கடன்கள் (கடன் திரும்பச் செலுத்துதல்களைக் கணக்கில் கொண்ட பின்னர்), ரொக்க இருப்புகளைப் பயன்படுத்துதல். கூடுதல் வளங்களைத் திரட்டுதல் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது.

எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், மாநில அரசு தான் விரும்பியபடி கடன் வாங்குவதற்கான சுதந்திரம் இல்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 293(3) பிரிவின் கீழ், இந்திய அரசின் அனுமதியுடன் மட்டுமே மாநில அரசு கடன் பெற முடியும், மேலும், இந்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நிகர கடன் உச்சவரம்பை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

இந்திய அரசு, 2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை 38,32,705 கோடி ரூபாயாகக் கணித்து, அதற்கான நிகர கடன் உச்சவரம்பை 1,14,981 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களின் அடிப்படையில் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ். 2026-27 ஆம் ஆண்டுக்கு மாநில அரசு நியாயமான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் 7.000 கோடி ரூபாய் கூடுதல் கடன் வரம்பிற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மாநில அரசு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அல்லது தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கடன்களைப் பெறுவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 11,000 கோடி ரூபாய் வரையிலான கூடுதல் கடன் வரம்பைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இருப்பினும், இந்திய அரசு தனது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை இந்த நோக்கத்திற்காக ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே இது அமையும். 15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மின்சாரத் துறை சீர்திருத்தங்களுக்காக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5 சதவீதம் வரை கூடுதல் கடன்களைப் பெற இந்திய அரசு இதுவரை அனுமதித்து வந்துள்ளது.

ஆனால், 2026-27 ஆம் ஆண்டு முதல் இந்த வசதியைத் தொடர்வது குறித்து 16-வது நிதிக் குழு தனது அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை மேலும், சுமார் 19,163 கோடி ரூபாய் மதிப்பிலான இக்கூடுதல் கடன் வசதியை இந்திய அரசு தொடர்ந்து வழங்குமா என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லாத நிலையே உள்ளது.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த இந்திய அரசின் முடிவு மற்றும் மின்சாரத் துறைக்கான 0.5 சதவீத கூடுதல் கடன் வரம்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பின்னரும், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்சக் கடன் வரம்பு 1.52,144 கோடி ரூபாயாகும். எனவே, மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறையை சரி செய்வதற்கு 11,600 கோடி ரூபாய் நிதி இடைவெளி உள்ளது: இதனை கூடுதல் வளங்களைத் திரட்டுவதன் மூலமும், செலவினங்களை முறைப்படுத்துவதன் மூலமும் மட்டுமே ஈடுசெய்ய முடியும்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 12% என்ற சாதகமான நிலையை எட்டுவதை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கணக்கீடுகள் அமைந்துள்ளன என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒருவேளை மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி 8%-ஆக இருக்கும் பட்சத்தில், இந்த இடைவெளி மேலும் 7,700 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கும். மூலதனச் செலவினங்களை 5,000 கோடி ரூபாய் வரை குறைக்க முடியும் என்றாலும், அது விரும்பத்தக்கது அல்ல.

மேற்சொன்ன மதிப்பீடு, வருவாய் நிலையில் இயல்பான செயல்பாட்டுச் செலவினங்களையும், அத்தியாவசிய மற்றும் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட மேம்பாட்டுச் செலவினங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டியது அவசியமாகும். முந்தைய அரசால் உருவாக்கப்பட்ட, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக மட்டுமே மிக அதிக அளவில் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் மோசமான நிலையாகும்.

மேலும், வருவாய் திரட்டும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு. செலவினங்களில் நிதிக் கட்டுப்பாடு நிதிநிலையில் கூடுதல் கடைப்பிடிக்கப்படாத வரையில், மாநிலத்தின் செலவினங்களுக்கு இடமளிக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான நிதிச் சுமைகள் மேற்கண்ட மதிப்பீட்டில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

முன்னோக்கிச் செல்லும் வழி

எனவே, நடப்பு ஆண்டின் குறுகிய காலத்திற்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளைக் கொண்ட நடுத்தர காலத்திற்கும் நிலைமை மிகவும் சவாலானதாகவே உள்ளது. இருப்பினும், நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.

கடந்த சில ஆண்டுகளாக வருவாய் வரவுகளின் வளர்ச்சியை முடக்கியுள்ள வருவாய் ஈட்டும் துறைகளில் நிலவும் கசிவுகள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதன் மூலம், மாநிலத்தின் வருவாயை பெருமளவு அதிகரிக்க முடியும். நிர்வாக முறைகேடுகளைக் குறைப்பதன் மூலமும், பொருட்கள் மற்றும் பணிகளைப் பெறுவதற்கான செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மக்களுக்குச் சென்றடையும் சேவைகள் மற்றும் திட்டப் பணிகளையும் பெருமளவில் மேம்படுத்த முடியும். இதைச் சாத்தியமாக்க பெருமளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

மாநில அரசின் நிதி நிலைமை மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதுடன், மிகக் கடுமையான சவால்களையும் முன்வைத்துள்ளது. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், மாநில அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. நிதி நிலைமை அனுமதிக்கும் வரையில், அவற்றை இயன்றவரை விரைவாக செயல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக, வருவாய் ஆதாரங்களை அதிகரிப்பதில் அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும். அதேவேளையில், கூடுதல் வருவாய்கள் கிடைக்கப் பெறுவதன் அடிப்படையில் தனது வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றும் என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.