




















Updated on
:
1 min read
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் 1967-ல் திமுக-வும், 1977-ல் அதிமுக-வும் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றன. அன்று முதல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆளுங்கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளன.
ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசியல் சூழலில் இன்று இந்த இரு கட்சிகளும் எதிர்க்கட்சியாக, ஒரே வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக் தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை ஆகும்.
மேலும், ஆளுங்கட்சி இருக்கைகளில் புதிய முகங்களும், நீண்டகாலம் ஆட்சி செய்த பாரம்பரியக் கட்சிகள் இரண்டும் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்திருப்பது தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。