惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Proofpoint News Feed
U
Unit 42
B
Blog
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“வடக்கோ, தெற்கோ எந்த மாநிலத்துக்கும் தொகுதி மறுவரையறையில்...
மோகன் கணபதி · 2026-04-16 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: “பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறையில் வடக்கோ, தெற்கோ, சிறிய மாநிலமோ, பெரிய மாநிலமோ யாருக்கும் அநீதி இழைக்கப்படாது; யாருக்கும் பாகுபாடு காட்டப்படாது” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சிலர் வெறுப்பு அரசியல் ஆதாயத்துக்காகவே குழப்பங்களை விளைவிக்கின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்த திசையில் உள்ள மாநிலமாக இருந்தாலும் சரி; சிறிய அல்லது பெரிய மாநிலங்களாக இருந்தாலும் சரி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகள் எவருக்கும் எதிராக பாகுபாடு காட்டாது என்பதை இந்த அவையின் புனிதமான இடத்தில் இருந்து முழு பொறுப்புணர்வுடன் நான் தெரிவிக்கிறேன்.

இந்த செயல்முறை எந்த ஒரு பிராந்தியத்துக்கோ அல்லது பிரிவினருக்கோ அநீதி இழைக்காது. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் எத்தகைய விகிதாச்சாரங்கள் உள்ளனவோ, அவை மாற்றமின்றி தொடரும்.

எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் இதே விகிதாச்சார அடிப்படையில்தான் இருக்கும். எனது நோக்கம் தெளிவாக இருப்பதால் தேவைப்பட்டால் வாக்குறுதி (promise) அளிப்பதாகவோ அல்லது உத்தரவாதம் (guarantee) அளிப்பதாகவோ எந்த ஒரு வார்த்தையையும் பயன்படுத்த தயாராக இருக்கிறேன்.

உங்களுக்கு உத்தரவாதம் என்ற சொல் தேவை என்றால் நான் உத்தரவாதம் அளிக்க தயாராக இருக்கிறேன். வாக்குறுதி தேவை என்றால் வாக்குறுதி அளிக்கத் தயாராக இருக்கிறேன். நோக்கம் தெளிவாக இருக்கும்போது சொற்களை வைத்து விளையாட வேண்டிய அவசியமில்லை.

பெண்களுக்கு இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று நான் எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலத்தில் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், தேர்தல்களில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்தால் அது எந்த ஒரு தரப்பினரின் அரசியலுக்கும் சாதகமாக அமையாமல் ஒட்டுமொத்தநாட்டுக்கே சாதகமாக அமையும்” என தெரிவித்தார்.