惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
腾讯CDC
博客园 - 聂微东
爱范儿
爱范儿
罗磊的独立博客
P
Proofpoint News Feed
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 司徒正美
美团技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
I
InfoQ
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மெலோனிக்கு ‘மெலோடி’ சாக்லெட் பரிசளித்த மோடி மீது ராகுல் க...
செய்திப்பிரிவு · 2026-05-20 · via hindutamil

Updated on: 

இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கே விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும், தொழிலாளர்களும், சிறு வணிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அங்கே பிரதமர் மோடி சிரித்துக் கொண்டு ரீல்ஸ் எடுக்கிறார். பாஜகவினர் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இது தலைமைப் பண்பு அல்ல. மாறாக அதை கேலிக்கூத்தாக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ரோம் நகர் சென்றடைந்தார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, "ரோம் நகரில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொலோசியம் அரங்குக்குச் சென்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இரு தலைவர்களும் ரோம் நகரின் வீதிகள் வழியாக ஒரே காரில் பயணித்ததைக் காண முடிந்தது. முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடியை சமூக ஊடகங்களில் அன்புடன் வரவேற்றார். அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "ரோம் நகருக்கு வருக, என் நண்பரே!" என்று எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், இரு தலைவர்களும் இரவில் கொலோசியம் அரங்குக்குள் அருகருகே நிற்பதைக் காண முடிகிறது. மென்மையான விளக்கொளியில் ஒளிரும் அந்தப் பழமையான ரோமானிய அரங்கின் பின்னணியில், இரு தலைவர்களும் வரலாற்றுச் சின்னத்தைப் பார்த்தவாறு நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

மெலோனிக்கு பரிசளித்த மோடி

இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி ஜார்ஜியா மெலோனிக்கு 'பார்லே மெலோடி' டாபிகள் (சாக்லெட்) அடங்கிய ஒரு பாக்கெட்டைப் பரிசாக வழங்கினார்.

இதையடுத்து, மெலோனி எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், "பிரதமர் மோடி எனக்கு ஒரு மிக மிகச் சிறந்த டாபியைப் பரிசாகக் கொண்டு வந்தார் - அதுதான் மெலோடி" என்று மெலோனி கூறியுள்ளார். அந்த வீடியோவின் தலைப்பில், 'பரிசுக்கு நன்றி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, “தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள்” என்று நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கூறி இருக்கிறார். இவற்றைக் கூறிய மோடி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குச் செல்கிறார். இதையெல்லாம் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். நாட்டில் ஒரு பொருளாதார புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடுமையான பணவீக்கம் ஏற்படும், அனைத்துப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும். அதோடு, உரங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்.

வர இருக்கும் காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கப் போகின்றன. நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்படப் போகிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதால், விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடும். ஆனால், இந்த பொருளாதார புயலின் தாக்கம் அதானி, அம்பானி, மோடி ஆகியோரை சிறிதும் பாதிக்காது. அவர்கள் தங்கள் ஆடம்பர மாளிகைக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த பொருளாதாரப் புயலால் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய மக்கள்தான்” என்று ராகுல் காந்தி காட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.