惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
News and Events Feed by Topic
Malwarebytes
Malwarebytes
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
F
Future of Privacy Forum
C
Cisco Blogs
T
The Exploit Database - CXSecurity.com
A
Arctic Wolf
S
Securelist
K
Kaspersky official blog
S
Schneier on Security
T
ThreatConnect
T
Tenable Blog
Spread Privacy
Spread Privacy
T
True Tiger Recordings
AWS News Blog
AWS News Blog
F
Fox-IT International blog
量子位
T
Threatpost
V
Vulnerabilities – Threatpost
C
CERT Recently Published Vulnerability Notes
Cisco Talos Blog
Cisco Talos Blog
GbyAI
GbyAI
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Cyberwarzone
Cyberwarzone
有赞技术团队
有赞技术团队
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
U
Unit 42
雷峰网
雷峰网
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
O
OpenAI News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The GitHub Blog
The GitHub Blog
The Register - Security
The Register - Security
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
A
About on SuperTechFans
Last Week in AI
Last Week in AI
Y
Y Combinator Blog
博客园 - 三生石上(FineUI控件)
美团技术团队
Google Online Security Blog
Google Online Security Blog
P
Proofpoint News Feed
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி கொல்கத்தாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டிய டெல்லி “தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்” - கனிமொழி எம்.பி “ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும்” - ட்ரம்ப் திட்டவட்டம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி - மும்பையை 30 ரன்களில் வீழ்த்தி அசத்தல்! மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அமோக வெற்றி “திருமாவளவன் தடம்மாற தயாராகிவிட்டார்” - விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் பும்ராவிடம் மன்னிப்புக் கோரிய ராம் சரண் - பின்னணி என்ன? “ரகசி​ய​ திரு​மணம் செய்ய மாட்டேன்” - வைரலான போட்டோவுக்கு கங்கனா விளக்கம் “அமைச்சர் ராஜ்மோகன் மட்டுமல்ல; முதல்வரும் புதியவர் தானே” - விஷாலுக்கு நடிகர் கிருஷ்ணா பதிலடி சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு கோவை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வேலை வாய்ப்பை வலியுறுத்தி மதுரையில் ‘காக்ரோச்’ இயக்க இளைஞர்கள் பேரணி சமூக வலைதளங்களில் பரவிய ஏஐ புகைப்படங்கள்: ருக்​மணி வசந்த் எச்​சரிக்கை தனி சின்னத்தில் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? - ஜவாஹிருல்லா விளக்கம் ‘கருப்​பு’ படத்​துக்கு எதிர்பார்க்காத வெற்றி: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி “இயல்பாக சிரித்ததை தவறாக சித்தரிப்பது வருத்தமளிக்கிறது” - அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.1 கோடி அளித்த அக் ஷய் குமாருக்கு குவியும் பாராட்டு கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸ் தேதி மாற்றம் ரொமான்ஸ் காமெடியாக உருவான ‘பா​தாம்​கீர்’ 'ஜன​நாயகன்' தணிக்கை சான்றிதழுக்கு இன்​னும் காத்திருக்கிறோம்: தயாரிப்பாளர் “கோயில்களில் காலாவதியான பிரசாதங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை” - அமைச்சர் சீ.ரமேஷ் “மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா?” - கே.என்.நேரு "ஈரான் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" - அமெரிக்க அமைச்சர் தகவல் தவெக உடன் காங்கிரஸ் விரைவாக கூட்டணி அமைத்தது ஏன்? - மாணிக்கம் தாகூர் விளக்கம் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ராமதாஸ் வரவேற்பு - புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வலியுறுத்தல் 100 மீட்டர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங் புதிய சாதனை - 10.09 வினாடிகளில் கடந்து அசத்தல் கோவை சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் முதல்வர் விஜய் ஆறுதல் - ரூ.7 லட்சம் நிதியுதவி அளிப்பு “முஸ்லிம்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக எழுப்ப வேண்டும்”: ராகுல் காந்தி “மேகேதாட்டு திட்டம் குறித்த டி.கே.சிவகுமாரின் பேச்சை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்”: சீமான் “சாக்கு போக்கு சொல்லாமல் மின்வெட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை” - பழனிசாமி பாகிஸ்தானின் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு எபோலா பரவல்: பயணம் செய்யக்கூடாத நாடுகளின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு வீழ்ச்சியின் பாதையில் பும்ராவின் பவுலிங்! - என்னதான் காரணம்? Oppo Find X9s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 2028 ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்ல அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: ஆதவ் அர்ஜுனா 11, 12ம் வகுப்புகளுக்கும் மதிய உணவு திட்டம் - தெலங்கானா அமைச்சரவை ஒப்புதல் “கிரிக்கெட் விளையாட்டு பொறுமையை சோதிக்கும்” - மகன் அர்ஜுனை பாராட்டிய சச்சின் சவுகார்பேட்டையில் நகை கடை அதிபர் வீட்டில் கைவரிசை: ரூ.5 லட்சம், 25 பவுன் நகையுடன் பணியாளர் தப்பியோட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.1.43 கோடி போதை பொருட்கள் பறிமுதல் சென்னை, புறநகரில் குளிர்ந்த வானிலை: மெரினா உள்ளிட்ட இடங்களில் புழுதிக் காற்று வீசியது கிரிக்கெட் பயிற்சி முதல் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடர் வரை | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் சோனியா, ராகுலுடன் கேரள முதல்வர் சந்திப்பு ஆசிய விளையாட்டு தகுதிப் போட்டியில் வினேஷ் போகத்தை அனுமதிக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18 படைப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் உயிரிழப்பு மருத்துவரை தாக்கிய நோயாளி உறவினர்கள் 10 பேர் கைது சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு போடுங்கள்: மம்தா உத்தரவு காஞ்சிபுரத்தில் 2 நாட்களில் 169 ரவுடிகளிடம் விசாரணை அறிவாலயம் ‘நோக்கி’ சிறுத்தை பிரபலங்கள்? | உள்குத்து உளவாளி சென்னையில் மே 30-ல் ‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ சிறப்பு நிகழ்வு ஆறுதல் வெற்றியா, பிளே ஆஃப் சுற்று வாய்ப்பா என்ற குழப்பத்தில் கொல்கத்தா - டெல்லி இன்று பலப்பரீட்சை நீட் தேர்வு விண்ணப்ப தொகை திரும்பப் பெற வங்கிக் கணக்குகளை மே 27 வரை பதிவேற்றலாம் பணி நியமன புதிய கொள்கை அடுத்த பட்ஜெட்டில் அறிமுகம்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையை சீராட்டி வளர்க்க போயிருக்கிறாரா? - திருமாவுக்கு எதிராக விசிகவுக்குள்ளேயே வெடிக்கும் விமர்சனம் மாநிலங்களவை மனுக்கள் குழு தலைவரானார் ராகவ் சத்தா கடுமையான வெயில் தாக்கத்தால் ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே நாளில் 55 பேர் உயிரிழப்பு திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி மாணவன் மாயம்: மகனை காப்பாற்ற முதல்வருக்கு தாய் வேண்டுகோள் மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு மாற்றுப்பணி: மேலாண் இயக்குநர் உத்தரவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சீனாவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் விநியோகம்: அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவான்காவை கொல்ல சதித் திட்டம்: இராக் இளைஞர் அல்-சாதி புரூக்ளின் சிறையில் அடைப்பு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளங்களை முடக்கிய மர்ம நபர்கள் பத்ம விருது பெற்றவர்களின் சாதனை விளக்க தொடர்: வானொலியில் இன்று முதல் ஒலிபரப்பு நிலக்​கரி சுரங்க எரிவாயு வெடி விபத்து: சீனாவில் 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 200 பேர் மீட்பு மத்திய அரசு வேலைக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ - பிரதமர் மோடி சந்திப்பு வீண்போகாத முயற்சி | வாசிப்பை நேசிப்போம் மிதக்கும் வீட்டில் ஒருநாள்! | புதிய வானம் புதிய பூமி மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 24 மே 2026 ஜோதிட நாள்காட்டி 24.05.2026 | வைகாசி 10 - ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள உள்ளூர் வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு நாடு முழுவதும் புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்கள் 9,057 பேருக்கு சான்றிதழ் பாடப் புத்தகம், கல்வி உதவிப் பொருட்களை பள்ளிக்கே கொண்டு வந்து வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி காயம் கொடைக்கானலில் பட்டம் விடும் திருவிழா பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 25 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை சபரிமலையில் நாளை நடை திறப்பு வார விடுமுறை நாட்களையொட்டி பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் குற்றாலத்தில் தனித்துவிடப்பட்ட குட்டி யானை தாயுடன் இணைந்தது தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக பாஜக விசாரணை குழு ஆய்வு 19-வது ‘ரோஜ்கார் மேளா’ - இலக்கை தாண்டி இதுவரை 12 லட்சம் பேருக்கு பணி - எல்.முருகன் பெருமிதம் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி தேவை: தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவி திடீர் உயிரிழப்பு “கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” - அதிகாரிகளுக்கு அமைச்சர் விக்னேஷ் அறிவுறுத்தல் கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 3-வது முறை உயர்வு டெல்லி விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை: 10 வயது சிறுமி கடத்திக் கொலை - நடந்தது என்ன? துரோகம் புரிவது காங்கிரசுக்கு புதிதல்ல: திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டன தீர்மானம் ஸ்ரேயஸ் அதிரடி சதம்: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் “ஆட்சிப் பொறுப்பேற்று 2 வாரங்களே ஆகி இருந்தாலும்...” - கோவை சிறுமி படுகொலைக்கு பா.ரஞ்சித் கண்டனம் தெலங்கானாவில் வெப்ப அலையால் 16 பேர் உயிரிழப்பு மேகேதாட்டு அணை விவகாரத்தில் விஜய் செய்ய வேண்டியது என்ன? - வேல்முருகன் யோசனை கருப்பசாமி பாடல் உருவானதன் பின்புலம் - சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு
பாகிஸ்தானில் ராணுவத்தினர் சென்ற ரயில் மீது கார் வெடிகுண்டு மோதி 30 பேர் உயிரிழப்பு
2026-05-25 · via hindutamil

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயிலை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. படம்: பிடிஐ

Updated on

2 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவத்தினர் பயணம் செய்த ரயிலைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாக உதயமானபோது பலுசிஸ்தானும் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. கடந்த 1948 மார்ச் மாதம் பலுசிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தான் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ராணுவ பலத்தின் மூலம் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. இதில் சுமார் 2 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது முதல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தான் மக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து 1970-ம் ஆண்டில் பலுச் விடுதலைப் படை என்ற கிளர்ச்சிப் படை (பிஎல்ஏ) உருவானது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக இந்த அமைப்பு தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள ராணுவ முகாமில் இருந்து நேற்று காலை சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், பாதுகாப்பு தளவாடங்களும் எடுத்துச் செல்லப்பட்டன. குவெட்டா ராணுவ முகாமில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சாமன் பதக் பகுதியில் ரயில் வந்தபோது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார், ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் 3 ரயில் பெட்டிகள் வெடித்துச் சிதறி உருக்குலைந்தன. பல பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ வீரர்களா என்பதை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்யவில்லை.

100 பேர் வரை உயிரிழப்பு?- ‘‘இந்த தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுகிறோம்’’ என்று குவெட்டா நகரின் மூத்த போலீஸ் அதிகாரி குவாதிர் கும்ரானி தெரிவித்துள்ளார்.

ரயில் தாக்குதலுக்கு பலுச் விடுதலைப் படை பொறுப்பேற்று உள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குவெட்டா ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர்கள் சென்ற ரயிலைக் குறிவைத்து எங்களது தற்கொலைப்படை பிரிவு கார் குண்டு தாக்குதலை நடத்தியது. பொதுமக்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. ராணுவ வீரர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தினோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

குவெட்டா போலீஸார் கூறும்போது, “வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஒட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ரயில் மீது மோதி தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களும் உருக்குலைந்து உள்ளன’’ என்று தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் ஹனீப் அப்பாஸி, “இந்தியா, ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன’’ என்று குற்றம்சாட்டி உள்ளார்.

சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பலுச் விடுதலைப் படையின் (பிஎல்ஏ) பலம் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படைகளை குறிவைத்து பிஎல்ஏ சார்பில் 150 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து 65-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டா, மஸ்துங், சிபி, நுஷ்கி, கரான், பன்ஜ்கூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பிஎல்ஏவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த கிளர்ச்சிப் படைக்கு பலுசிஸ்தான் இளைஞர்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. பெண்களும் பிஎல்ஏ படையில் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தலிபான்கள், பிஎல்ஏ கூட்டணி பாகிஸ்தான் ராணுவத்துக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.