惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
V
V2EX
Martin Fowler
Martin Fowler
博客园 - Franky
P
Proofpoint News Feed
P
Palo Alto Networks Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
B
Blog
The Register - Security
The Register - Security
Latest news
Latest news
S
Security @ Cisco Blogs
Simon Willison's Weblog
Simon Willison's Weblog
Recorded Future
Recorded Future
大猫的无限游戏
大猫的无限游戏
M
Microsoft Research Blog - Microsoft Research
Scott Helme
Scott Helme
T
Tailwind CSS Blog
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Application and Cybersecurity Blog
Application and Cybersecurity Blog
T
True Tiger Recordings
有赞技术团队
有赞技术团队
I
Intezer
Cisco Talos Blog
Cisco Talos Blog
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
The GitHub Blog
The GitHub Blog
cs.AI updates on arXiv.org
cs.AI updates on arXiv.org
T
Tenable Blog
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
Hacker News: Ask HN
Hacker News: Ask HN
S
Security Archives - TechRepublic
F
Future of Privacy Forum
爱范儿
爱范儿
PCI Perspectives
PCI Perspectives
H
Help Net Security
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
N
Netflix TechBlog - Medium
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
MongoDB | Blog
MongoDB | Blog
Security Latest
Security Latest
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
S
Schneier on Security
量子位
C
CERT Recently Published Vulnerability Notes
SecWiki News
SecWiki News

hindutamil

சென்னையில் நாளை ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு மின் வாரிய இணைய சேவைகள் இன்றும், நாளையும் இயங்காது காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்பு வினேஷ் போகத் விவகாரத்தில் மல்யுத்த சம்மேளனத்துக்கு கண்டனம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: ​கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ-மைனிங் திட்டம் மூலம் 94 ஏக்கர் நிலம் மீட்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்​சம் அபராதம் எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான் உலகளவில் அதிக வெப்பம் - இந்தியாவில் 97 நகரங்கள் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல் கொலை மிரட்டல் தொடர்ச்சியாக விடுக்கப்படுகிறது: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் புகார் உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது 2 பேர் உயிரிழப்பு அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் நடிகர் ஜார்ஜ் மரியான் ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ 3 கல்வியாளர்களுக்கு எதிரான தடையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம் பத்து நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு கோருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி ஜார்ஜ் குட்டி குடும்​பத்தை ஏற்​றுக்​கொண்​டதற்கு நன்றி: நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி கோவையில் மையக்குழு கூட்டம் நிறைவு: நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாம் ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை அரசுத் துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை எம்ஆர்எஃப், கோத்தாரி குழுமத்தினர் முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கருத்து: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கண்டனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 மே 2026 ஜோதிட நாள்காட்டி 23.05.2026 | வைகாசி 09 - சனிக்கிழமை கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வைக்கப்பட்ட முயல், டால்பின் வடிவ மலர்ச் சிற்பங்கள் மதுரை அருகே கான்கிரீட் குழியில் மண் சரிந்து உயிருடன் புதைந்த இரு பெண் தொழிலாளர்கள் குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை திமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறது: பிரேமலதா மீண்டும் உறுதி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறாமல் அலைக்கழிப்பு: 5 போலீஸார் சஸ்பெண்ட் மக்கள் மனதை புண்படுத்தாத அரசியல் செய்தால் அரசு நீடிக்கும்: தவெகவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவுரை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் 25-ம் தேதி முதல் தொடக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய கோயில்களில் அனைத்து வசதிகளையும் செய்க: அமைச்சர் ரமேஷ் உத்தரவு பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டது: 1,597 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் தமிழகத்தில் காலியாகும் ஒரு இடம் உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-ல் மாநிலங்களவைத் தேர்தல் பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க முதல்வர் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார் விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு: தமிழக அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி ‘பரிமளா அண்ட் கோ’ உருவானது எப்படி? - இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி எல்லை கடந்த ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ - பாகிஸ்தானிலும் பரவும் புதிய டிரெண்ட் மேகேதாட்டு விவகாரம்: டி.கே.சிவகுமாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் “தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்” - பிரேமலதா கி.வீரமணி மிரட்டலுக்கு பணிந்து அறநிலையத் துறை செயலாளர் சுவர்ணா மாற்றமா? - வானதி சீனிவாசன் திமுகவுக்குள் ‘பாஜக ஆதரவு’ குரல்கள்... - மு.க.ஸ்டாலினின் ‘கூட்டணி பாலிசி’ மாறுமா? ‘அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது’ - தவெகவினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா.கிருஷ்ணன் நியமனம் தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - முழு விவரம் ‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் இருக்கை நுனியில் அமர வைக்கிறதா? திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி டிஜிட்டல் வாரியர்ஸ் Vs கொள்கை வாரியர்ஸ்: தவெக - திமுக ‘இன்ஸ்டா’ யுத்தப் போக்கு எத்தகையது? ஜூன் 21-ல் நடக்கும் நீட் மறுதேர்வு 100% பிழையற்றதாக இருக்கும்: மத்திய அமைச்சர் உறுதி ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் பி.கே.செந்தில்குமாரி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வானிலை முன்னறிவிப்பு: சேலம், தி.மலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு “பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது ஆ.ராசாவின் கருத்து” - அமைச்சர் வன்னியரசு 8 தொகுதிகளை அள்ளிக் கொடுத்த மதுரைக்கு ஒரு அமைச்சர்தானா? - தவெக தொண்டர்கள் சோர்வு ஓட்டேரி நல்லா கால்வாய் பாலம் விவகாரம்: சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு ‘அம்மா உணவக’ அரசியல்... முதல்வர் விஜய் வியூகம் என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ முதன்முறையாக அமைச்சர் தொகுதியான ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி பின்புலம் என்ன? 10 மாநிலங்களை சேர்ந்த 24 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 18-ல் தேர்தல் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை “தமிழக மக்களிடமும், திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஆதவ் அர்ஜுனா 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரை பெற்ற திருவாடானை தொகுதி! தூத்துக்குடி மாவட்டத்துக்கு மீண்டும் இரண்டு அமைச்சர்கள்! இந்தியா - சைப்ரஸ் உறவில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு மேட்டூர் அருகே காவிரி கரையில் அகழாய்வுப் பணியை தொடங்கிய தொல்லியல்துறை ‘அதிரடி’ படம் எப்படி? - பசில் ஜோசப் விவரிப்பு இந்​தி​யா​வின் மின்​னணு சாதன தயாரிப்பு கனவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனாவின் கட்டுப்பாடுகள்! மீண்டும் மலேசிய சொல்லிசை செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில் இருக்க வேண்​டும்: உச்ச தலை​வர் மோஜ்தபா கமேனி உறுதி ‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்...’ - உங்கள் சுமையை தூக்க புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரெடி! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ? கொடைக்கானலில் ஆட்டம் பாட்டத்துடன் ‘கோடை விழா’ தொடக்கம் - சுற்றுலாப் பயணிகள் கொண்டாட்டம் “பதவிக்காக தவெக அரசை ஆதரிக்கவில்லை” - எஸ்.பி.வேலுமணி விளக்கம் உ.பி.யை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் “சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தவெக அமைச்சரவை ” - மாரி செல்வராஜ் பாராட்டு மேகேதாட்டு அணை விவகாரம்: தவெக அரசின் நிலைப்பாட்டை விளக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை தமிழகத்தில் ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு “கூட்டணி ஆட்சி அமையவே முடியாது என்ற பேச்சுக்களுக்கு காங்கிரஸ் விடை கொடுத்திருக்கிறது” - அமைச்சர் விஸ்வநாதன் நாங்கள் இளம் அணி என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர் - ருதுராஜ் வேதனை பிசிசிஐ-யினால் ஓரங்கட்டப்பட்டாலும் கடமையே கண்ணான மணீஷ் பாண்டே! இந்திய வெளியுறவு கொள்கைக்காக அமெரிக்கா வேறு என்ன திட்டங்களை வைத்துள்ளது? - காங்கிரஸ் “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை தவெக அமைச்சரவையில் விசிக: ஆ.ராசாவின் கண்டன ட்வீட்களால் சர்ச்சை காங்​கோ​வில் எபோலா வைரஸ் பரவல் காரண​மாக இந்​தியா - ஆப்பிரிக்க ஒன்​றிய உச்சி மாநாடு ஒத்​திவைப்பு சுதேசி தயாரிப்​பு​களை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு பார்லே நிறுவனம் நன்​றி அமெரிக்காவில் தொடரும் எச்-1பி விசா பணிநீக்கம்: 60 நாளில் வேறு வேலை தேடாவிட்டால் வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹான் சுட்டுக் கொலை ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா: அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் 19 கோடி பார்​வை​யாளர்​களை கவர்ந்த மோடி - மெலோனி வீடியோ வன்னியரசுக்கு சமூக நீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு திமுகவில் இருந்து திருப்பூர் மாவட்ட செயலாளர் விலகல்: மாற்று கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தலைமைக்கு கடிதம் அமைச்சர்களாக வன்னியரசு, ஷாஜஹான் பதவியேற்பு: நனவானது விசிகவின் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ கனவு உ.பி. தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி; இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி
லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்​சாப் கிங்ஸ்?
2026-05-23 · via hindutamil

Updated on

2 min read

லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் 6-ல் வெற்​றிகளை குவித்து மிரட்​டி​யிருந்​தது. இதனால் கோப்​பையை வெல்ல வாய்ப்​புள்ள அணி​களுள் ஒன்​றாக அந்த அணி இருக்​கக்​கூடும் என அனை​வ​ராலும் கருதப்​பட்​டது. ஆனால் அடுத்த 6 ஆட்​டங்​களில் அந்த அணி தொடர்ச்​சி​யாக தோல்வி அடைந்து தற்​போது பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் எழுந்​துள்​ளது.

13 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள பஞ்​சாப் அணி 6 வெற்​றி, 6 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்​கான வாய்ப்​பில் நீடிக்க வேண்​டுமென்​றால் இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது பஞ்​சாப் அணி. அந்த அணி இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாலும் அதி​கபட்​ச​மாக 15 புள்​ளி​களையே பெற முடி​யும்.

இது நிகழ்ந்​தா​லும் ராஜஸ்​தான், கொல்​கத்தா அணி​களின் கடைசி ஆட்​டங்​களின் முடிவை பொறுத்தே பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய​வரும். இதில் ராஜஸ்​தான் அணி 14 புள்​ளி​களை​யும், கொல்​கத்தா அணி 13 புள்​ளி​களை​யும் பெற்​றுள்​ளன. ராஜஸ்​தான் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் மும்​பை​யுட​னும், கொல்​கத்தா அணி தனது கடைசி ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுட​னும் மோதுகின்​றன. இந்த 2 ஆட்​டங்​களும் நாளை (24-ம் தேதி) நடை​பெறுகின்​றன.

ராஜஸ்​தானும், கொல்​கத்​தா​வும் தங்​களது ஆட்​டங்​களில் தோல்வி அடைந்​தால் மட்​டுமே பஞ்​சாப் அணி அடுத்த சுற்​றுக்கு முன்​னேற முடி​யும். ராஜஸ்​தான் அணி மும்​பையை வீழ்த்​தி​னால் பஞ்​சாப், கொல்​கத்தா ஆகிய 2 அணி​களுமே தொடரில் இருந்து வெளி​யேறும். ஒரு​வேளை ராஜஸ்​தான் அணி தோல்வி அடைந்​தால் பஞ்​சாப், கொல்​கத்தா அணி​களுக்கு வாய்ப்பு கிடைக்​கும்.

இதி​லும் ஒரு சிக்​கல் உரு​வாகக்​கூடும். ராஜஸ்​தான் அணி மும்​பை​யிடம் தோல்வி அடைந்து பஞ்​சாப், கொல்​கத்தா அணி​கள் தனது கடைசி ஆட்​டத்​தில் வெற்றி கண்​டால் இந்த இரு அணி​களும் தலா 15 புள்​ளி​களை எட்​டும். அப்​போது நிகர ரன் விகிதத்தை பொறுத்தே பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் அணி எது என்​பது முடி​வாகும். தற்​போதைய சூழ்​நிலை​யில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் நிகர ரன் விகிதம் 0.227 ஆகவும், கொல்​கத்தா அணி​யின் நிகர ரன் விகிதம் 0.011 ஆகவும் உள்​ளது.

ஆனால், இந்த கணிப்​பு​களும் கணக்​கு​களும் வரு​வதற்கு முன்​பாக, பஞ்​சாப் அணி முதலில் தங்​களது சரி​விலிருந்து மீண்டு ஃபார்​முக்கு வர வேண்​டியது அவசி​யம். ஏனெனில், இந்​தத் தொடர் சரிவு அந்த அணி​யின் அனைத்​துப் பிரிவு​களி​லும் உள்ள பலவீனங்​களை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யுள்​ளது.

பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன் சிங், கூப்​பர் கானொலி ஆகியோரைக் கொண்ட அந்த அணி​யின் அதிரடி​யான டாப் ஆர்​டர் இந்​தத் தொடரின் முதல் பாதி​யில் கொடுத்த அதிரடி​யான தொடக்​கங்​களை தொடரின் பிற்​பகு​தி​யில் வழங்​கத் தவறி​விட்​டது. பிரியன்ஷ் ஆர்யா தனது கடைசி ஏழு இன்​னிங்​ஸ்​களில் ஒரே ஒரு அரைசதம் மட்​டுமே அடித்​துள்​ளார். அதோடு முந்​தைய போட்​டி​யில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். அதே நேரத்​தில், பிரப்​சிம்​ரன் சிங் தனது கடைசி ஐந்து இன்​னிங்​ஸ்​களில் ஒரே ஒரு அரைசதம் மட்​டுமே அடித்​து, சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடி​யாமல் தவித்து வரு​கிறார்.

கூப்​பர் கானொலி கிடைத்த தொடக்​கங்​களை பெரிய ரன்​களாக மாற்​றத் தவறுகிறார். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயரும் தோல்வி அடைந்த ஆறு ஆட்​டங்​களில் ஒரே ஒரு முறை மட்​டுமே ஐம்​பது ரன்​களைக் கடக்க முடிந்​தது.

டெல்​லிக்கு எதி​ரான 265 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்​திய பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் நடு​வரிசை பேட்​டிங் தற்​போது தனது வேகத்தை இழந்​துள்​ளது. அதே நேரத்​தில், பந்​து​வீச்சு பிரி​வும் இன்​னிங்​ஸின் தொடக்​கத்​தி​லும் சரி, இறு​தி​யிலும் சரி, தொடர்ந்து ரன்​களை வாரி வழங்கி வரு​கிறது. அதோடு முக்​கிய தருணங்​களில் தவற​விடப்​பட்ட கேட்ச்​கள் பெரும் பின்​னடைவை ஏற்​படுத்​தின. மோச​மான ஃபீல்​டிங்​கும் பஞ்​சாப் அணி​யின் முன்​னேற்​றத்​துக்கு முட்​டுக்​கட்​டை​யாக மாறியது.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்​ஸ் நடப்பு தொடரில் முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்​திருந்​தது. 13 ஆட்​டங்​களில் 9 தோல்வி​களை சந்​தித்​துள்ள அந்த அணி கடைசி ஆட்​டத்​தில்​ ஆறு​தல்​ வெற்​றி பெற்​று தொடரை நிறைவு செய்​வதில்​ கவனம் செலுத்தக்கூடும்.