惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
B
Blog
月光博客
月光博客
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வேடார்: நாக்-அவுட்டில் பிரேசிலை சந...
வேட்டையன் · 2026-06-26 · via hindutamil

Updated on: 

நியூயார்க்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியை ஈக்வேடார் அணி வீழ்த்தியது. மறுபக்கம் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் பிரேசில் உடன் ஜப்பான் பலப்பரீட்சை செய்கிறது.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள 48 அணிகளும் முதல் சுற்றில் அதன் கடைசி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் குரூப்-ஏ முதல் எஃப் வரையில் இடம்பெற்றுள்ள அணிகள் தலா 3 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இன்னும் ஜி, ஹெச், ஐ, ஜே, கே, எல் ஆகிய பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. வரும் 28-ம் தேதி உடன் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைகிறது. இதனால் உலகக் கோப்பை தொடர் அதன் வழக்கமான பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.

ஜெர்மனி vs ஈக்வேடார்

குரூப்-இ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஈக்வேடார் அணிகள் இடையிலான ஆட்டம் ஈஸ்ட் ரூதர்போர்டில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனியின் சனே கோல் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதற்கான பதில் கோலை அடுத்த 7-வது நிமிடத்தில் ஈக்வேடார் அணியின் நில்சன் பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஈக்வேடாரின் கெவின் ரோட்ரிக்ஸ் கொடுத்த பாஸை கோலாக மாற்றி இருந்தார் கோன்சாலோ. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் ஈக்வேடார் அணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஈக்வேடார் விளையாடியது. ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன் மூலம் 2006-க்கு பிறகு நாக்-அவுட் சுற்றுக்கு அந்த அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த நாட்டில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் உடன் ஜப்பான் பலப்பரீட்சை

குரூப்-எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதன் மூலம் மூன்று ஆட்டங்களில் 1 வெற்றி, 2 டிரா உடன் குரூப் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதே பிரிவில் இருந்து நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

நாக்-அவுட் சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றில் ஜப்பான் அணி, பிரேசில் உடன் விளையாடுகிது. இந்த ஆட்டம் வரும் 29-ம் தேதி நடைபெற்றது. நெதர்லாந்து அணி, மொராக்கோவை வரும் 30-ம் தேதி எதிர்கொள்கிறது

நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு (நாக்-அவுட்) இதுவரை 19 அணிகள் முன்னேறி உள்ளன.

அதன் விவரம்: மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா & ஹெர்சகோவினா, தென் ஆப்பிரிக்கா, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் 13 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டி உள்ளது.