























நான் உடனே, “கொஞ்சம் மெதுவாகப் பேசு. பக்கத்துல ஆம்பளைங்களா இருக்காங்க” என்றதும் சட்டெனச் சுருங்கிய மகளின் முகம் மெல்லச் சிவந்து, “ஆம்பளைங்க இருந்தா என்னங்கப்பா? எச்சில் துப்புற மாதிரி, மூக்கு சிந்துற மாதிரி பீரியடும் சாதாரண விஷயம். இதுல கூச்சப்படுறதுக்கு என்ன இருக்கு? இதுக்கே இப்படிச் சொல்றீங்களே, பெங்களூர்ல கூட வேலை செய்யற அண்ணனுங்ககிட்ட தான், ‘அண்ணா பீரியட் ஆயிருச்சு. கொஞ்சம் நாப்கின் வாங்கிட்டு வர்றீங்களா’ன்னு கேட்பேன். அவங்களும் வாங்கி வந்து தந்துருக்காங்க...
பீரியட்ஸ் பத்தி பேசறது உங்களுக்கு அசிங்கமா இருந்துச்சுன்னா, இனிமே அதைப் பத்தி உங்ககிட்ட பேச மாட்டேன்” என்றாள். மாதவிடாய் குறித்த எனது அழுக்குப் புரிதலை மாற்றும் வகையில் அமைந்தது அந்த இரவு நேரப் பயணம்.
- சு. புஷ்பராஜ், கோயமுத்தூர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。