


























திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்
Updated on
:
1 min read
திருவள்ளூர்: ஆற்றுப்படுகைகள், அரசு புறம் போக்கு நிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில், ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் இருந்து அரசின் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி யெடுத்து, வாகனங்களில் கடத்திச் செல்வது தொடர்பாக கடந்த 16ம் தேதி திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலர்களால் ஊத்துக்கோட்டை வட்டத்தில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டதில், உரிய அனுமதி நடைச் சீட்டுயில்லாமல் கள்ளத்தனமாக கனிமங்கள் (கிராவல் மற்றும் சாதாரண மண் ஏற்றிச் சென்ற 3 பாரஸ் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனவே, இதுபோன்ற வாகனங்களை கண்காணிக்க தொடர் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளு மாறு வருவாய்த் துறை, கனிம வளத்துறை, காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதுடன், இக்குற்றச் செயலில் தொடர்ந்து ஈடுபடு வோரைக் கண்காணித்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் பிரதாப் கூறியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。