
















1990-களில் இந்தியாவில் இந்துத்துவ அரசியலின் எழுச்சி, 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான சமூக - அரசியல் மாற்றங்கள் ஆகியவை திரைப்படங்களிலும் எதிரொலித்தன. இதன் விளைவாக சில திரைப்படங்களில் முஸ்லிம்கள் தேசவிரோதிகளாகவோ அல்லது வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டவர்களாகவோ சித்தரிக்கப்பட்டனர். இத்தகைய காட்சிப்படுத்தல்கள் பொதுச் சமூகத்தின் பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்தப் பின்னணியில் ‘ஹபீபி’ திரைப்படம் குறிப்பிடத்தக்க படைப்பாக அமைகிறது. 1980-களின் கடையநல்லூர் முஸ்லிம் சமூக வாழ்வியலை இயல்பாகவும் நுட்பமாகவும் பதிவு செய்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இஸ்லாமிய சமூக மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், உறவுகள், சடங்குகள், மொழிப்பயன்பாடுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை படம் உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்துகிறது. அதே நேரத்தில், 1990-க்குப் பிறகு சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்கிறது. இது குறித்து முழுமையாக விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。