惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
C
Check Point Blog
博客园 - 【当耐特】
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
The Cloudflare Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Vercel News
Vercel News
IT之家
IT之家
MyScale Blog
MyScale Blog
博客园_首页
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை இந்த நாள் நினைவூ...
மோகன் கணபதி · 2026-06-25 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: “நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட இந்த நாள், இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை பிறப்பித்தார். அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “அரசியலமைப்பு படுகொலை தினம் என்பது இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்க இது நம்மைத் தூண்டுகிறது. அவசரநிலையை எதிர்த்த அனைத்து சான்றோர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

சுதந்திரத்தின் மூலமே மகிழ்ச்சி கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே உன்னத நிலையை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே நிறைவு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே மிக உயர்ந்த நிலையை எட்ட முடியும்” என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு படுகொலை தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1975, ஜூன் 25 என்பது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். அப்போது இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் அதிகாரத் திமிருடன் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மா, பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை நசுக்க முயன்றன. அரசியலமைப்பு படுகொலை தினமான இன்று, நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க அவசரநிலைக்கு எதிராகப் போராடிய ஜனநாயகப் போராளிகள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு சட்ட படுகொலை தினம் என மோடி அரசு அனுசரிப்பதன் நோக்கம், இந்த இருண்ட அத்தியாயத்தை நாட்டின் நினைவில் நிலைநிறுத்துவதும், எதிர்காலத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருபோதும் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது என்பதை உறுதி செய்வதுமே ஆகும்” என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “1975-ம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி, இந்திய ஜனநாயக வரலாற்றில் நாடு அவசரநிலையைச் சந்தித்த ஒரு இருண்ட நாளாகும். அதிகார மமதையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். மாற்றுக்கருத்துகள் ஒடுக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், அரசியலமைப்பின் விழுமியங்களையும் ஜனநாயக மரபுகளையும் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஜனநாயகம் மீதான அந்தத் தாக்குதலை வருங்கால சந்ததியினர் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காக, இந்நாளை 'அரசியலமைப்பு படுகொலை நாளாக' அனுசரிக்க முடிவு செய்ததன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அந்த இருண்ட அத்தியாயத்தை நினைவூட்டியுள்ளார். ஜனநாயகம், குடிமை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது. அரசியலமைப்பு என்பது நமது நாட்டின் மிகப்புனிதமான நூல், நமது ஜனநாயகக் குடியரசின் வலுவான அடித்தளம் என்பதையும், அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.