
























நாடளுமன்ற நிலைக்குழுவினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருப்பதியில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
Updated on:
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விசிக தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார். பாதுகாப்புத்துறை தொடர்பான நாடளுமன்ற நிலைக்குழுவினர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இடம்பெற்று உள்ளார். கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் தொடங்கி, பெங்களூரு, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய இடங்களில் பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த குழுவினர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திருமாவளவனும், நிலைக்குழுவினருடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்குள் உள்ள ரங்க நாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களும், தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத ஆசியும் வழங்கினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。