惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
Recent Announcements
Recent Announcements
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
H
Help Net Security
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享
U
Unit 42
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
F
Fortinet All Blogs
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
D
DataBreaches.Net
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
A
About on SuperTechFans
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
C
Check Point Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தவெக அமைச்சரவையில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேறுவோம்...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: தவெக அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​று​விட்​டோம் என்ற காரணத்​தி​னாலேயே, அக்​கட்​சி​யுடன் கூட்​டணி சேர்ந்​து​விட்​டோம் என்று பொருள் கிடை​யாது. நாங்​கள் இன்​னும் கூட்​ட​ணியை உரு​வாக்​கிக் கொள்​ள​வில்​லை. எந்த நேரத்​தி​லும் அமைச்​சர​வை​யில் இருந்​து​கூட நாங்​கள் வெளியே வரலாம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

இதுகுறித்து தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் ஆதர​வைப் பெறாமல், மதச்​சார்​பற்ற சக்​தி​களை அழைக்க தவெக முடிவு எடுத்​தது. இந்த யுக்​தியை அனை​வரும் பாராட்​டு​கின்​றனர். தவெக​வுக்கு நிபந்​தனையற்ற ஆதரவு அளிக்க இடது​சா​ரி​கள் முடிவு செய்​தன. வெளி​யில் இருந்து ஆதரவு என்ற முடிவையே விசிக உயர்​நிலைக் குழு கூட்​டத்​தில் நான் வலி​யுறுத்​தினேன். ஆனால், அமைச்​சர​வை​யில் பங்​கேற்க வேண்​டும் என எங்​கள் கட்​சி​யினர் வலி​யுறுத்​தினர்.

தமிழகத்​தில் இது​போன்ற வாய்ப்பு அமைவது கற்​பனை​யிலும் நடக்​காது. பல மாநிலங்​களில் ஏற்​கெனவே பட்​டியலினத்​தவர்​கள் துணை முதல்​வர்​களாக உள்​ளனர். இந்த சூழலில், இப்​படி வரும் வாய்ப்பை பயன்​படுத்​து​வ​தில் தவறு இல்லை என கம்​யூனிஸ்ட் கட்​சி​யினரும், திமுக​வில் ஒரு சிலரும் கூறினர்.

இதையடுத்​து, ஆதவ் அர்​ஜு​னாவை அழைத்து ஆதர​வுக் கடிதம் கொடுத்​த​போது, ‘‘அமைச்​சர​வை​யில் நீங்​கள் இடம்​பெற வேண்​டும்’’ என்​றார். அதற்​கு, ‘‘அமைச்​சர​வை​யில் இடம்​பெற விருப்​பம் இல்​லை. வெளி​யில் இருந்து ஆதரவு தரு​கிறோம். அமைச்​சரவை குறித்து பிறகு பேசலாம்’’ என்​றேன். இதையடுத்​து, வன்​னியரசை அமைச்​ச​ராக்க முடிவு செய்து அறி​வித்​தேன்.

அதற்கு சில நாட்​களுக்கு முன்பு எங்​கள் கட்சி பொதுச் செய​லா​ளர் ரவி​கு​மார், எனக்கு துணைமுதல்​வர் பதவி கொடுக்க வேண்​டும் என பேசி​யுள்​ளார். அது எனக்கு தெரி​யாது. இது குறித்து முதல்​வர் விஜய் என்​னிடம் பேசி​னார். அப்​போது, ‘‘துணை முதல்​வர் பதவி என்​பது எங்​கள் திட்​டத்​தில் இல்​லை. ஆனால், நீங்​கள் அமைச்​சர​வை​யில் இடம்​பெற வேண்​டும்’’ என்​றார். அப்​போதும் மறுத்​தேன்.

பின்​னர், ரவி​கு​மார் பேசி​யது குறித்து அறிந்​தவுடன் ஆதவ் அர்​ஜு​னா​விடம் உடனே பேசி என் பெயரை சேர்க்க வேண்​டாம் என உறு​தி​யாக கூறினேன்.

தவெக​வுக்கு நாங்​கள் ஆதரவு அளிக்​கும் விவ​காரத்​தில் திமுக​வும் நெகிழ்​வுத்​தன்​மை​யுடன் இருந்​தது எங்​களுக்கு அதிர்ச்​சி​யாக இருந்​தது. ‘நம் கூட்​ட​ணிக்கு ஆதர​வானவர்​கள்​தான் தவெகவை எதிர்த்து வாக்​களித்​துள்​ளனர். எனவே, தவெக​வுக்கு விசிக, இடது​சா​ரி​கள் ஆதரவு தரக்​கூ​டாது’ என திமுக கூறி​யிருக்க வேண்​டும். ஆனால், திமுக அதை செய்​ய​வில்​லை.

‘ஏற்​கெனவே இடது​சா​ரி​கள் வெளி​யில் இருந்து ஆதரவு அளிப்​ப​தாக அறி​வித்​துள்​ளன. திரு​மாவளவனும் அதே முடிவை எடுப்​பது எந்த நேரத்​தி​லும் பிரச்​சினை​தான். திடீரென ஆதரவை அவர் திரும்​பப் பெற்​றால் என்ன செய்​வது. ஆதரவு அளிப்​ப​தாக கூறிக்​கொண்டே திமுக கூட்​ட​ணி​யில் தொடர்​வ​தாக அவர் பேசுகிறா​ரா’ என்​றெல்​லாம் தவெக​வினர் கவலை கொண்​டனர். தவெக​வின் சந்​தேகத்தை போக்​கத்​தான் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்​தோம், அதற்கு பரி​சாக தவெக அமைச்​சர​வை​யில் எங்​களுக்கு இடம் தரப்​பட்​டது.

அதே​நேரம், அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​று​விட்​டோம் என்​ப​தாலேயே, தவெக கூட்​ட​ணி​யில் சேர்ந்​து​விட்​டோம் என்று பொருள் கிடை​யாது. நாங்​கள் இன்​னும் கூட்​ட​ணியை உரு​வாக்​கிக் கொள்​ள​வில்​லை. இது​தான் உண்​மை. எந்த நேரத்​தி​லும் நாங்​கள் அமைச்​சர​வை​யில் இருந்​து​கூட வெளியே வரலாம். வரமுடி​யாதுஎன்​ப​தற்கு என்ன இருக்​கிறது. அப்​படி அரசி​யல் செய்ய முடி​யும். அப்​படி ஒரு நிலைப்​பாட்​டை​யும் எங்​களால் எடுக்க முடி​யும். திமுக - அதி​முக இணைந்து ஆட்​சி​யமைப்​பது குறித்து ஒரு கருத்து நில​வுவ​தாக திமுக தலை​வர் எங்​களிடம் கூறி​னாரே தவிர, திமுக - அதி​முக இணைந்து ஆட்​சி​யமைக்​கலாம் என கூற​வில்​லை.

அதற்​காக, திமுக - அதி​முக இணைவது குறித்த கருத்தே தவறு என கூற முடி​யாது. ஆதவ் அர்​ஜு​னா​விடம் ரூ.300 கோடி வாங்​கிய​தாக விமர்​சிக்​கின்​றனர். விசிக எழை எளிய மக்​களின் கட்​சி. திரு​மாவளவன் பணத்​துக்கு ஆசைப்​படு​கிறார்​ என கட்​டமைப்​பது அவதூறான குற்​றச்​சாட்​டு. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.