惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
Last Week in AI
Last Week in AI
腾讯CDC
The Cloudflare Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
雷峰网
雷峰网
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
Y
Y Combinator Blog
H
Help Net Security
T
Tailwind CSS Blog
美团技术团队
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மூத்தவர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாய...
2026-05-18 · via hindutamil

Updated on

3 min read

என் சகோ​தரி டப்​பிங் பணி​களுக்​குச் செல்​லும் போது அவருடன் நான் துணைக்கு சென்று கொண்​டிருந்த காலம் அது. வருடம் நினை​வில் இல்​லை. அந்த கால​கட்​டத்​தில் சென்​னை​யில் சோழா ஓட்​டலுக்கு பின்​னால் காதம்​பரி, ராம்​லீலா என இரண்டு டப்​பிங் தியேட்​டர்​கள் அடுத்​தடுத்து இருந்​தன.

ராம்​லீலா தியேட்​டருக்கு அக்கா​வுடன் சென்​றிருக்​கும் போது அங்கு நீலக்​கலர் வேஷ்டி, ஒரு சட்டை அணிந்து வந்து என் சகோ​தரி ஹேம​மாலினி​யிடம், “வணக்​கம் நான்​தான் ராதா​ர​வி” என்று புன்​னகை​யுடன் தன்னை அறி​முகப்​படுத்​திக் கொண்​டார்.

நான் அரு​கில் நின்​றேன். அப்​போது நான் அதி​கம் பேச மாட்​டேன் என்​ப​தால் அவரிடம் பேசிக்​கொள்​ள​வில்​லை. அக்​கா, அவரிடம் பேசிக்​கொண்​டிருந்​தார். என் அப்பா நிலக்​கிழார் என்று ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன்.

என் தந்​தையை எம்​.ஆர்​.​ரா​தாப்பா அண்​ணன் என்​று​தான் அழைப்​பார். மறைந்த எம்​.ஆர்​.ஆர்​.​வாசு அண்​ணன், என் தந்​தையை பெரியப்பா என்று கூப்​பிடு​வார். இதை நான் அந்த காலத்​தில் பார்த்​திருக்​கிறேன்.

பிறகு நானும் டப்​பிங் துறைக்கு வந்​து​விட்​ட​தால் ராதா​ரவி அண்​ணனை பல இடங்​களில் பார்க்​கும் வாய்ப்பு கிடைத்​தது. நெருங்​கிப் பழகி விட்​டோம். அவரை எங்கு பார்த்​தா​லும் காலைத்​தொட்டு நமஸ்​காரம் செய்​வதும் கன்​னத்​தில் முத்​தம் கொடுப்​பதும் என் வழக்​கம்.

அன்​றி​லிருந்து அவர் எங்​கள் குடும்​பத்​துக்கு மூத்​தவ​ராகி விட்​டார். என் வீட்​டில் டிவி பார்த்​துக்​கொண்​டிருக்​கும் போது விளம்​பரங்​கள் வந்​தால், என் மனைவி அதை மியூட் பண்​ணி​விட்​டுச் சமையல் வேலை செய்​வார்.

என் மகள் ஐஸ்​வர்​யா, சவுண்ட் இல்​லாமல் வரும் அந்த விளம்​பரங்​களுக்​குப் பேசிப்​பார்த்​துக்​கொண்​டிருப்​பார். குழந்தை ஏதோ பேசுகிறது என கண்​டு​கொள்ள மாட்​டேன். பிறகு டப்​பிங் பேச ஏதாவது குழந்​தைகளின் குரல் தேவை என்​றால் என் அக்​கா, ஐஸ்​வர்​யாவை அழைத்​துக் கொண்டு செல்​வார்.

பின்​னர் அவர் விஸ்​காம் படித்​துக்​கொண்​டிருந்​த​போது, ஒரு நாள் ஒரு விளம்​பரப் படம் ஒன்​றைக் காண்​பித்​தார். நான் நன்​றாக இருக்​கிறது என்று சொன்​னேன். உடனே “அதில் வரும் கதா​நாயகிக்கு நான்​தான் பேசி​யிருக்​கிறேன்” என்று சொன்​னதும் எனக்கு வியப்​பும் மகிழ்ச்​சி​யும்.

பிறகு சில கரெக் ஷன்​களை சொன்​னேன். பிறகு அவருக்​கும் டப்​பிங் கார்டு வேண்​டும் என்று கேட்​டார். உடனடி​யாக ராதா​ரவி அண்​ணனிடம் போய் சொன்​னேன்.

அதுக்​கென்ன வாரிசு அடிப்​படை​யில் கொடுக்​கலாம் என்று கார்டு கொடுத்து என் மகளுக்கு ஆசிர்​வாதம் பண்​ணி​னார். இன்று அவர் பிசி​யான டப்​பிங் ஆர்​டிஸ்​டாக இருப்​ப​தற்கு இறைவன் அருளும், அண்​ணனது கைராசி​யும்​தான் காரணம்.

ஒரு பெரிய விஷ​யம் என்​னவென்​றால், எம்​.ஆர்​.​ரா​தாப்பா எந்​தளவுக்கு நாத்​தி​கக் கொள்​கை​களில் பிடிப்பு உள்​ளவரோ, ராதா​ரவி அண்ணா ஆத்​தி​கத்​தில் அதி​கப் பிடிப்​புள்​ளவர்.

“அப்பா ஒண்​ணும் சொல்ல மாட்​டா​ரா?” என்று நான் கேட்​டிருக்​கிறேன். அதற்கு அவர், “அப்பா எது​வும் சொல்ல மாட்​டார். ‘நாத்​தி​கத்தை நான் நம்​பறேன். உனக்கு என்ன பிடிக்​குதோ அதை நீ நம்​பு’ன்னு சொல்​லி​யிருக்​காருடா பாஸு” என்​றார்.

பிறகு என் மகன் ஆதித்யா பாஸ்​கர் நடித்து டப்​பிங் பேச வேண்​டும் என்​ற​போது அவனுக்​கும் டப்​பிங் கார்டு வேண்​டும் என்று கேட்​டேன். அதற்கு என்ன முறையோ அதன்​படி பணம் கட்டி வாங்​கினோம்.

அதை​யும் அவரே ஆசீர்​வ​தித்து கொடுத்​தார். அவருடன் பல படங்​களில் நடித்​திருக்​கிறேன். படப்​பிடிப்​பில் அவர் இருக்​கிறார் என்​றால் நான் அவருடன்​தான் எப்​போதும் இருப்​பேன். அவருக்கு நான் சொந்த தம்பி மாதிரி.

ஆரம்​பத்​தில் விஜய்​காந்த் அண்​ணன், ராதா​ரவி அண்​ணன், வாகை சந்​திரசேகர், எஸ்​.எஸ்​.சந்​திரன் மாமா, ‘மண்​வாசனை’ பாண்​டியன், தியாகு... இவர்​கள் எல்​லோரும் ஒரு நட்பு வட்​டத்​தில் இருந்​தார்​கள். இவர்​கள் எல்​லோருக்​கும் நான் ஓர் உறவினர் மாதிரி. எல்​லோரிட​மும் எனக்கு நெருக்​க​மான பழக்​கம்.

ஒரு நாள் காரைக்​குடி​யில் படப்​பிடிப்​பு. ராதா​ரவி அண்​ணனுடன் ஒரு படத்​தில் நடித்​துக்​கொண்​டிருந்​த​போது, வேறு படப்​பிடிப்​புக்​காக நான் காட்​டுமன்​னார்​கோ​யில் செல்ல வேண்​டும். எப்​போதும் எந்த ஊராக இருந்​தா​லும் நானே கார் ஓட்​டிச் செல்​வேன். அதனால், “என்​னோட காட்​சியை அப்​புறமா எடுங்க.

தம்பி பாஸு முடிச்​சுட்டு கிளம்​பணும். நைட் கண் முழிச்​சுட்டு வண்டி ஓட்ட வேண்​டாம். அதனால் அவன் காட்​சியை முதல்ல எடுத்​துட்டு அனுப்​புங்க” என்​றார். என் தொழிலிலும் நலனிலும் அக்​கறை கொண்டு அன்பு செலுத்​துகிறவர் அவர் என்​ப​தற்​காக இதை சொன்​னேன்.

பிறகு “ஊருக்​குப் போய் சேர்ந்​ததும் எந்த நேர​மா​னாலும் எனக்கு மெசேஜ் போடு, நான் தூங்​கிட் டேன்​னா, காலைல போன்ல பேசு. அப்​ப​தான்டா தம்பி எனக்கு நிம்​ம​தியா இருக்​கும்” என்று சொல்​வார். ரவி அண்​ணனுக்கு என் இயல்​பான நகைச்​சுவை நிறைய பிடிக்​கும். படப்​பிடிப்​பின் போது அதை சொல்​லு, இதை சொல்லு என்று கேட்டு சிரித்​துக் கொண்டே இருப்​பார்.

தனக்கு ஒன்று தெரிய​வில்லை என்​றால் மற்​றவரிடம் கேட்க தயங்​கவே மாட்​டார். ஒரு​நாள் அவர் எனக்கு போன் பண்​ணி​னார். எடுத்து ‘வணக்​கண்​ணே’என்​றேன். ‘டேய் பாஸு, நான் தெலுங்கு படத்​துல நடிச்​சிட்​டிருக்​கேன்.

ஒரு தத்​து​வம் சொல்​லணும், அது உண்​மை​யாக​வும் அர்த்​த​முள்​ள​தாக​வும் இருக்​கணும், அதே நேரம் கேவல​மா​வும் இருக்​கணும். அந்த மாதிரி ஏதாவது இருக்​கா?” என்று கேட்​டார். “இருக்​கு” என்று சொன்​னேன். “என்​ன​டா, சொல்லி வாயை மூடலை, அதுக்​குள்ள இருக்​குன்னு சொல்​லிட்​டே” என்று கேட்​டார். “இருக்​குண்​ணே.

கேளுங்க, சொல்​றேன்” என்று சொல்​லி​விட்​டு, பிறகு சொன்​னேன், “கஷ்டம் வந்​தவனுக்கு நஷ்டம் வந்​தா, பிரச்​சினையை விரல் விட்டு எண்ண முடி​யாது. குஷ்டம் வந்​தவனுக்கு கஷ்டம் வந்தா பிரச்​சினையை எண்​றதுக்கு விரலே இருக்​காது” என்​றேன்.

அவர் சிரித்​து​விட்​டு, “அடப்​பா​வி, இது உண்​மை​யாக​வும் இருக்​கு, கேவல​மாக​வும் இருக்​கு, கேட்​டாலும் சிரிப்பு வருது. உன்​னால மட்​டும்​தான்டா இப்​படிலாம் யோசிக்க முடி​யும்” என்று பாராட்​டி​விட்டு ‘இதை தெலுங்​கில் நான் மாற்​றிக்​கொள்​கிறேன்’ என்​றார்.

அதே போல அவர் ஏதாவது கோபப்​பட்​டால் கூட ஒரு செகண்ட் மட்​டும்​தான் இருக்​கும். அடுத்த நொடி, சகஜ​மாகி விடு​வார். கள்​ளம் கபட​மில்​லாத மனிதர். எங்​கள் குடும்​பத்​தின் மீது அக்​கறை கொண்​ட​வர். இன்​று​வரை டப்​பிங் யூனியன் தலை​வ​ராக இருக்​கிறார். ஆயுள் உள்​ளவரை அங்கு அவர்​தான் தலை​வ​ராக இருக்க வேண்​டும் என்​பது என் ஆசை.

அவருக்கு நிறைய பேர் வேண்​டிய​வர்​கள். நான் முன்பே குறிப்​பிட்​டிருக்​கிற பங்​காளி வீரமணி, கே.ஆர்​.செல்​வ​ராஜ், இயக்​குனர் டி.என்​.​பாலு​மா​மா​வின் மகன் கதிர் மற்​றும் நாடக நடிகர்​கள் பலர் என எல்​லோருமே அவருக்கு வேண்​டிய​வர்​கள். இன்​றும் அவர் இல்​லத்​தில் நாடக நடிகர்​கள் பலர் இருப்​பார்​கள்.

எல்​லோரிட​மும், “சாப்​பிட்​டி​யா?” என்று அக்​கறை​யுடன் விசா​ரித்து விட்டு ஜாலி​யாக பேசிக்​கொண்​டிருப்​பார். நட்பு வட்​டம், நண்​பர்​கள் இல்​லாமல் அவரால் தனி​யாக இருக்​கவே முடி​யாது. உண்​மை​யைச் சொல்ல வேண்​டும் என்​றால் எங்​கள் குடும்​பத்​தில் அவர் மூத்தவர்​! இறை​வா எங்​க ரவி அண்​ணனுக்​கு நல்​ல ஆரோக்கி​யத்​தை​யும்​, நீண்​ட ஆயுளையும்​ கொடு என்​று இறைவனை வேண்​டுகிறேன்​.

(திங்​கள்தோறும் பேசுவோம்)