惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 【当耐特】
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
H
Help Net Security
爱范儿
爱范儿
罗磊的独立博客
博客园_首页
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை” - பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ்...
2026-05-16 · via hindutamil

Updated on

2 min read

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு தரம்சாலாவில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை தோற்​கடித்​தது. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 200 ரன்​கள் குவித்தது. அதி​கபட்​ச​மாக பிரப்​சிம்​ரன் சிங் 57, அஸ்​மதுல்லா ஓமர்ஸாய் 38 ரன்​கள் சேர்த்​தனர். மும்பை அணி தரப்​பில் ஷர்துதல் தாக்​குர் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை அணி 19.5 ஓவர்களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 205 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. திலக் வர்மா 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​களும், வில் ஜேக்ஸ் 10 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்டரிகளு​டன் 25 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்​து​விட்ட மும்பை அணிக்கு இது 4-வது வெற்றி​யாக அமைந்​தது.

அதேவேளை​யில் பஞ்​சாப் கிங்ஸ் அணி தொடர்ச்​சி​யாக 5-வது தோல்​வியை சந்​தித்​தது. அந்த அணி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 5 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்ளிகளை பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. தொடர்ச்சி​யான தோல்வி​களால் பஞ்​சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் எழுந்​துள்​ளது. அந்த அணி எஞ்சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றாமல் மட்​டுமே பிளேஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற முடியும்.

பஞ்​சாப் அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் நாளை (17-ம் தேதி) ஆர்சிபி அணியை எதிர்​கொள்​கிறது. தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் வரும் 23-ம் தேதி லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்​திக்​கிறது பஞ்​சாப் கிங்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதி​ரான தோல்விக்கு பின்​னர் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறிய​தாவது: நிச்சயமாக, இது ஜீரணிக்க முடி​யாத கடின​மான தோல்​வி​தான். ஆனால், இதற்​காக நான் எந்​தவொரு குறிப்​பிட்ட சூழலை​யும் சுட்டிக்​காட்ட விரும்​ப​வில்​லை. ஏனெனில், இது சிறந்த கிரிக்​கெட் போட்​டி. இரு அணி​களும் மிகச்​சிறப்​பாகப் போராடினோம்.

திலக் வர்மா அற்​புத​மாக விளை​யாடி​னார், பந்​துகளைத் தேர்ந்​தெடுத்து அடித்த விதம் அரு​மை, மேலும் ஃபீல்​டிங்​கிற்கு ஏற்​ற​வாறு பந்​துகளை லாவக​மாக திசை திருப்பி விளை​யாடி​னார். எனவே இந்த வெற்​றிக்கு அவர் தகு​தி​யானவர், பேட்​டிங்​கின் போது நாங்கள் ஒரு கட்​டத்​தில் 170 முதல் 180 ரன்​கள் வரை மட்​டுமே எடுப்​போம் என்று தோன்​றியது. ஆனால், அங்​கிருந்து அஸ்மதுல்லா ஓமர்​ஸாய் ஆட்​டத்​தின் போக்கை அப்​படியே எங்களுக்கு சாதக​மாக மாற்​றி​னார்.

அவர், ஸ்கூப் ஷாட்​கள் மூலம் சிக்​ஸர்​களைப் பறக்​க​விட்​டார். 16 அல்​லது 17-வது ஓவரிலிருந்து எங்​களுக்​குக் கிடைத்த வேகம் காரண​மாகவே 200 ரன்​களை எட்​டினோம். ஆர்​சிபி அணிக்கு ஏதிராக அடுத்து நடை​பெற உள்ள ஆட்​டத்தை ஆவலுடன் எதிர்​நோக்கி உள்​ளோம். இந்த போட்டி பிற்​பகலில் நடை​பெறுகிறது. எஞ்​சி​யுள்ள 2 போட்​டிகளி​லும் நாங்​கள் கண்​டிப்​பாக வெற்றி பெற்றாக வேண்​டும். அந்த இரண்டு போட்​டிகளும் மிக​வும் விறுவிறுப்​பாக அமை​யும்​. இவ்​வாறு ஸ்ரேயஸ்​ ஐயர்​ கூறி​னார்.