惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
罗磊的独立博客
IT之家
IT之家
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
腾讯CDC
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு: அண்ணாமலையின் அர...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்த சிறப்பு புத்தகங்களை நடிகர் ரஜினிகாந்திடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார். உடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர்.

Updated on: 

சென்னை: நடிகர் ரஜினி​காந்தை அவரது இல்​லத்​தில் பாஜக மாநில தலைவர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்து பேசி​னார். அண்​ணா​மலையின் அரசி​யல் பிர​வேசம் குறித்து 45 நிமிடம் ஆலோ​சித்​தனர்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை ஆட்​சியை மற்​றும் நாட்​டின் முன்​னேற்​றப் பயணத்​தைப் பறை​சாற்​றும் வகை​யில், தமிழக பாஜக பல்​வேறு சிறப்​புக் களப்​பணி​களை ஒருங்​கிணைத்து வரு​கிறது. இதன் ஒரு பகுதி​யாக, பிரதமரின் சாதனை​களை விளக்​கும் தமிழ் மற்​றும் ஆங்​கில மொழியி​லான சிறப்​புப் புத்​தகங்​களை பாஜக வெளி​யிட்​டுள்​ளது. இப்​புத்​தகங்​களை தமிழகத்​தின் முக்​கிய அரசி​யல் தலை​வர்​கள் மற்​றும் பிரபலங்​களை நேரில் சந்​தித்து பாஜக-​வினர் வழங்கி வரு​கின்​றனர்.

நேற்​று, தமிழக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், சென்னை போயஸ் தோட்​டத்​தில் உள்ள நடிகர் ரஜினி​காந்​தின் இல்​லத்​துக்​குத் திடீரென நேரில் சென்று, அவரை சந்​தித்​துப் பேசி​னார். இச்​சந்​திப்​பின் போது, பாஜக மேலிடப் பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், மாநிலச் செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் மற்​றும் மாநிலப் பிரச்​சா​ரப் பிரிவு அமைப்​பாளர் பாண்​டிய​ராஜ் ஆகியோர் உடனிருந்​தனர்.

அப்​போது, பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்பு புத்​தகங்​களை ரஜினி​காந்​துக்கு நயினார் நாகேந்திரன் வழங்​கினர். தொடர்ந்​து, சுமார் 45 நிமிடங்​கள் நீடித்த இந்​தச் சந்​திப்​பு, வெறும் மரி​யாதை நிமித்​த​மான சந்​திப்​பாக மட்​டுமில்​லாமல், தமிழகத்​தின் தற்​போதைய பரபரப்​பான அரசி​யல் சூழலை அலசும் விவாத​மாக அமைந்​த​தாகக் கூறப்​படு​கிறது. குறிப்​பாக, தமிழக முதல்​வர் விஜய் மற்​றும் தவெக-​வின் நகர்​வு​கள், விஜய்​யின் தற்​போதைய அரசி​யல் செயல்​பாடு​கள் குறித்​தும், அதி​முக-​விலிருந்து வில​கும் முக்​கிய நிர்​வாகி​கள் தவெக​வில் இணைந்து வரு​வது குறித்​தும் விரி​வாகப் பேசப்​பட்​டுள்​ளது.

அது​மட்​டுமில்​லாமல், அண்​ணா​மலை​யின் புதிய அரசி​யல் பிர​வேசம் குறித்து நீண்ட நேரம் ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது, பாஜக-​விலிருந்து விலகி அண்​ணா​மலை புதிய அரசி​யல் அமைப்​பைத் தொடங்​கி​யிருப்​பது, அந்த இயக்​கத்​தில் பாஜக-​வினர் பலரும் தொடர்ந்து இணைந்து வரு​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. மேலும், அண்​ணா​மலை​யின் புதிய இயக்​கத்​தின் உட்​கட்​டமைப்பு மற்​றும் நிர்​வாக ஏற்​பாடு​கள் குறித்​தும் ரஜினி​யும், பாஜக தலை​வர்​களும் விவா​தித்​துள்​ளனர்.

மேலும், அண்​ணா​மலை​யின் புதிய கட்​சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்​பார் என வெளி​யாகி வரும் தகவல்​களை, ரஜினி மறுத்​த​தாக​வும், அவர் யாருக்​கும் ஆதரவு இல்லை என இந்த சந்​திப்​பின் போது தெளிவுப்​படுத்​தி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது. தமிழக அரசி​யல் களம் புதிய கூட்​ட​ணி​களை​யும் மாற்​றங்​களை​யும் நோக்கி நகர்ந்து வரும் வேளை​யில், பாஜக தலை​வர்​கள் ரஜினி​காந்​தைச் சந்​தித்து இந்த முக்​கிய விவ​காரங்​களை வி​வா​தித்​திருப்​பது அரசி​யல் வட்​டாரத்​தில்​ பெரும்​ எதிர்​பார்ப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.