惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
G
Google Developers Blog
小众软件
小众软件
V
V2EX
月光博客
月光博客
腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏
J
Java Code Geeks
Y
Y Combinator Blog
人人都是产品经理
人人都是产品经理
B
Blog RSS Feed
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 【当耐特】
D
Docker
M
MIT News - Artificial intelligence
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
I
InfoQ
MongoDB | Blog
MongoDB | Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘நீங்கள் முதல்வர் ஆனதையே மறந்துவிட்டு...’ - திருச்சியில் ...
வெற்றி மயிலோன் · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது. உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?’ என முதல்வர் விஜய்யை திமுக விமர்சித்துள்ளது.

இன்று திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், திமுக மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இது குறித்து திமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தன்னை யாரோ ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததாகத் திருச்சியில் மேடையேறி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் முதல்வர் விஜய். உற்றுப் பார்த்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது.

உண்மையிலேயே உங்களுக்குத் திராணி இருந்தால், ஆளுநரிடம் நீங்கள் அளித்த உரிமைகோரல் கடிதங்களை முதலில் மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள். எப்படியாவது பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்ற பதவி வெறியில் நீங்கள் அரங்கேற்றிய தகிடுதத்தங்களை நாடறியும்.

காரில் அரங்கேறிய அரசியல் அசிங்கம்:

அமமுக உறுப்பினர் காமராஜை காரில் வைத்து அவசரகதியில் கையெழுத்து வாங்கியதும், அந்தக் காணொளியை உங்கள் கட்சியினரே சமூக வலைத்தளங்களில் பரப்பி அது அம்பலமானதும் தான் உங்கள் நேர்மையா?

பச்சையான குதிரை பேரம்:

இதுவரை தமிழ்நாடு அரசியலில் யாரும் செய்யத் துணியாத வகையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுகவின் ஒரு தரப்பினரைச் சந்தித்து, அவர்களைக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கச் செய்த திரைமறைவு வேலைகளைச் செய்தது யார்? இதுதான் நீங்கள் மேடைதோறும் முழங்கும் நேர்மையின் இலக்கணமா?

இத்தனை அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ 'அரசியல் புனிதர்' போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிக்கிறது.

முதல் நாளே மக்கள் தீர்ப்பை மதித்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி, அதிகாரப்பூர்வமாக அறிவித்த எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலினின் அரசியல் அறம் எங்கே?

முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின்பும் உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஐடி விங்கின் மற்றொரு பதிவில், ‘என்ன சார் செய்வது. ஆட்சிக்கு வந்து ஆறு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் படு பாதாளத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை. இது பத்தாது என்று கரன்ட் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

ஆனால், நீங்கள் முதல்வர் ஆனதையே மறந்துவிட்டு, வழக்கம் போல மேடை ஏறி திமுக மீது பழியைப் போட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

முதல்வர் நாற்காலி வேண்டும், ஆனால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால் எப்படி சார்?

ஆளத் தெரியாமல் அடுத்தவர்கள் மேல் பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள். முதலில் போய் மக்கள் கொடுத்த வேலையைப் பாருங்கள் சிஎம் சார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.