惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
腾讯CDC
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
博客园_首页
D
DataBreaches.Net
P
Proofpoint News Feed
云风的 BLOG
云风的 BLOG
V
Visual Studio Blog
月光博客
月光博客
Jina AI
Jina AI
Stack Overflow Blog
Stack Overflow Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
Vercel News
Vercel News
WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனம...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

யான்சி, பாலகுரு, கிஷோர் குமார்,ஜோஷ்வா

Updated on: 

சென்னை: சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட தகராறில், இலங்கை இளம்​பெண் கார் ஏற்றி கொலை செய்​யப்​பட்​டார். இந்​தச் சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டில் பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்று உள்​ளது. அதன் உள்​புறம் உள்ள மது பாரில் நேற்று முன்​தினம்​இரவு 11 மணி​யள​வில் இரு தரப்​பினர் மது அருந்​தினர். அப்​போது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது ஒரு​வர் சரமாரி​யாக தாக்​கிக் கொண்​டனர்.

அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். ஆனால் வெளி​யில் வந்​தும் இருதரப்​பினரும் மோதலில் ஈடு​பட்​டனர். அவர்​களைப் பவுன்​சர்​கள் மீண்​டும் விலக்கி எச்​சரித்து அனுப்​பினர். இந்த மோதலால் நள்​ளிர​வில் மது​பார் மூடப்​பட்​டது. மோதலில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு தரப்​பினர் 3 பைக்​கு​களில் அங்​கிருந்து அடுத்​தடுத்து புறப்​பட்​டனர். மற்​றொரு தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் தாங்​கள் வந்த சொகுசு காரில் கிளம்​பினர்.

கோயம்​பேடு பாலத்​துக்கு கீழே (கோ​யம்​பேடு - திரு​மங்​கலம் செல்​லும் வழி) சென்று கொண்​டிருந்த போது ஏற்​கெனவே தகராறில் ஈடு​பட்டு முன்​னால் பைக்​கில் சென்​றவர்​களில் ஒரு தரப்​பினர் கற்​களை வீசி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது காரில் வந்​தவர்​களுக்கு ஆத்​திரத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

இதையடுத்​து, சொகுசு காரை அதிவேக​மாக ஓட்டி எதிர்​தரப்​பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாக​னத்தை ஓட்​டிச் சென்ற 18 வயது இளம்​பெண் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னால், அமர்ந்​திருந்த 17 வயது சிறுமிக்​கும் பலத்த காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, கொலை​யாளி​கள் அங்​கிருந்து மின்​னல் வேகத்​தில் தப்​பினர்.

நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த சம்​பவம் அந்த பகு​தி​யில் பெரும் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. தகவல் அறிந்து கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று உயி​ரிழந்த பெண்​ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காகக் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். காயம் அடைந்த சிறுமியை​யும் அதே மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். தடய​வியல் நிபுணர்​கள் சம்பவ இடத்​தில் தடயங்​களைச் சேகரித்​தனர்.

போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், உயி​ரிழந்த பெண் யான்சி (18) என்​பதும், விழுப்​புரம் மாவட்​டம் அனிச்​சம் குப்​பத்​தில் (இலங்கைத் தமிழர்​மறு​வாழ்வு முகாம்) வசித்​ததும், கடந்த 19-ம்​தே​தி, திரு​வள்​ளூர் மாவட்​டம் கொண்​டஞ்​சேரியைச் சேர்ந்த தோழி தம்​பிதா என்​பவர் மூலம் அறி​முக​மான, சென்னை ராமாபுரத்​தில் வசிக்​கும் மற்​றொரு தோழி​யான பவுசி தீபி​காவை (17) பார்க்க வந்​ததும் தெரிந்​தது.

பின்​னர், கடந்த 10 நாட்​களாக அவரது வீட்​டிலேயே யான்சி தங்​கி​யுள்​ளார். இந்​நிலை​யில்​ தான் 28-ம் தேதி மாலை சினி​மாவுக்கு செல்​வ​தாகக் கூறி வெளியே சென்று மறு​நாள் காலைவீட்​டுக்கு வந்​தவர்​களைச் சிறுமி​யின் தாய் கண்​டித்​துள்​ளார். இதனால், கோபித்​துக் கொண்டு இரு​வரும் வீட்டை விட்டு வெளி​யேறி உள்​ளனர்.

பின்​னர், தங்​களது இன்​ஸ்​டாகி​ராம் நண்​பர்​கள் உள்பட 6 பேர் சம்​பவத்​தன்று மது​பாருக்கு சென்​றுள்​ளனர். அப்​போது ஏற்​பட்ட தகராறில் யான்சி கார் ஏற்​றிக் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். யான்சி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்டு பிரச்​சினை​யால் அவரது குடும்​பத்​தினர்​ தமிழகத்​தில்​ தஞ்​சம்​ அடைந்​த​தாக​வும்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

4 பேரிடம் விசாரணை: சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் போலீ​ஸார் வி​சா​ரணை நடத்​தினர். யான்​சி​யை கார்ஏற்றி கொலை செய்​தது தொடர்​பாக அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பால​குரு (21), சூளைமேட்​டைச் சேர்ந்த கல்​லூரி​ மாணவர் ஜோஷ்வா (19), பி.இ. மாணவர் நெற்​குன்​றம் கிஷோர்​கு​மார் (19) ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

விரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்தபி.டெக். மாணவர் சுமந்த் சக்​திவேல் (21), ரா​மாபுரத்​தைச் சேர்ந்த பி.​காம். மாணவர் மோகன சுந்​தரம் (19), அண்ணா நகரைச் சேர்ந்தடிப்​ளமோ மாணவர் ராகுல் (20), சூளைமேட்​டைச் சேர்ந்த விமல் (19) ஆகிய மேலும் 4 பேரிடம் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவர்​கள் தி​முக ஆதர​வாள​ரான சுமன் சக்​திவேல் என்​பவருக்கு சொந்​த​மான தி​முக கொடி கட்​டிய காரில் மது​பாருக்கு சென்​றதும் தெரியவந்தது.

தாய் கதறல்: யான்சி கொலை செய்​யப்​பட்ட தகவல் அறிந்த தாய் மேரி ஸ்டெல்லா கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் கண்​ணீருடன் கூறும்​போது, ‘‘ என் மகள் கொலைக்கு நீதி வேண்​டும். என் பிள்​ளை​யைக் கொலை செய்​தவனை முதல்​வர் விஜய் தூக்கிலிட வேண்​டும். இல்லை என்​றால் துப்​பாக்கி கொடுங்​கள். கொலை​யாளியை நானே கொன்​று​விட்டு சிறைக்​குச் செல்​கிறேன்​’’ என்​று கூறி​னார்​.