





















Updated on
:
1 min read
வேலூர் மாவட்டம், பேர் ணாம்பட்டு பகுதியைச் சேர்ந் தவர் தர்ஷீர் (26). இவர் சென்னை, கோயம்பேடு மார்க் கெட்டில் உள்ள ஒரு பழக்கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் இரவு தர்ஷீர் கடையில் இருந்தபோது, அதன் உரிமையாளர் ஷேக் ரோஷன் என்பவர் அவரைத் தொடர்பு கொண்டு, தான் தற்போது வானகரத்தில் இருப்பதாகவும், கடையில் உள்ள ரூ.14 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக அங்கு வருமாறும் கூறியுள்ளார்.
முதலாளியின் உத்தரவின் படி, தர்ஷீர் பணப் பையுடன் ஆட்டோவில் வானகரம் சென்றார். ஆட்டோ நெற்குன்றம் தயாசதன் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த போது, அங்கு போலீஸ் சீருடையில் இருந்த 2 பேர் ஆட்டோவை வழிமறித்தனர்.
போக்குவரத்து காவலர்கள் போலத் தோற்றமளித்த அவர்கள், ஆட்டோ ஓட்டுநரிடம் ஆவணங்களைச் சரிபார்ப்பது போல நடித்துள்ளனர். பின்னர், ஆட்டோவில் இருந்த தர்ஷீரிடம், "பையில் என்ன இருக்கிறது ?" என்று கேட்டுள்ளனர். தர்ஷீர் தன்னிடம் பணம் இருப்பதாகக் கூறியவுடன். ஒரு காவலர் அவரிடமிருந்த ரூ.14 லட்சம் பணப்பை மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்த ரோந்து வாகனம் போன்ற வாகனம் ஒன்றில் ஏறி மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றார்.
மற்றொரு நபர், தர்ஷீரை தனது பைக்கில் ஏற்றிச் சென்று மதுரவாயல் பாலத்தின் கீழே இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். காவலர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தர்ஷீர், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போது, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் யாரும் பணம் பறிமுதல் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த தர்ஷீர், இது குறித்து அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு. போலீஸ் உடையில் வந்து கைவரிசை காட்டிய அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。