惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
量子位
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
F
Fortinet All Blogs
美团技术团队
博客园_首页
博客园 - 【当耐特】
L
LangChain Blog
月光博客
月光博客
腾讯CDC
The Cloudflare Blog
D
Docker
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பழனிசாமி Vs எஸ்.பி.வேலுமணி + சி.வி.சண்முகம் - மீண்டும் உட...
2026-05-11 · via hindutamil
வீரமணி சுந்தரசோழன்

Updated on

2 min read

மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே வெடித்துள்ள மோதல், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தமிழக வரலாற்றிலேயே எம்ஜிஆருக்கு பின்னர் யாரும் தொடர்ந்து இருமுறை ஆட்சியமைத்தது இல்லை என்ற வரலாற்றை உடைத்து 2011-க்குப் பின்னர் 2016-லும் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. அந்த ஆண்டு டிசம்பர் மாதமே அவர் உயிரிழந்த பின்னர், அதிமுகவுக்கு தொடர்ந்து கஷ்ட காலம் தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மகுடம் சூட சசிகலா தயாரானபோது ஓ.பன்னீர்செல்வம் முதல் பிளவுக்கு வித்திட்டார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் ஏற்பட்ட காட்சி மாற்றங்களில் சசிகலாவும், தினகரனும் தூக்கியெறியப்பட்டனர். அப்போது இரண்டாவது பிளவை சந்தித்தது. அதன்பின்னர் அதிமுகவின் பல முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிகளுக்கும் தாவினார்கள்.

அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சித்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தவெகவுக்கு போனார். அவருக்கு பின்னர் ஜேசிடி பிரபாகரனும் போனார். அதிமுகவில் ஐக்கியமாக பல கட்ட முயற்சிகளை செய்த ஓபிஎஸ்சும் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா என பலரும் திமுகவில் இணைந்தனர். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் பலரை இழந்த அதிமுக, இப்போது அடுத்த பிளவுக்கு தயாராகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதன் காரணமாக, ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி என 50 ஆண்டுகளாக இருந்துவந்த அதிமுக இப்போது மூன்றாவது கட்சியாக மாறியுள்ளது. பல தொகுதிகளில் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக, கணிசமான தொகுதிகளில் டெபாசிட்டையே இழந்தது அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்தச் சூழலில்தான், அதிமுகவில் பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு அணிகள் பிரிந்துள்ளன. கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. இதனால் வேலுமணியின் கை ஓங்கியுள்ளது. அதேபோல வட மாவட்டங்களிலும் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது, அங்குள்ள எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் பின்னால் அணி திரண்டுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் பக்கம் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோர் திரண்டுள்ளனர். இவர்கள் வைக்கும் முக்கிய விஷயங்கள் இதுதான், ‘ 2017-ல் அதிமுக பழனிசாமி வசம் சென்றது முதல் ஒரு தேர்தலில் கூட கட்சி வெற்றிபெறவில்லை. தொடர்ந்து 11 தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துள்ளோம். கடந்த தேர்தலில் சரியான கூட்டணி வைக்க இபிஎஸ் தவறிவிட்டார். தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை’ என குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக சட்டப்பேரவைக் கட்சி தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரையும் நியமிக்க தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இவர்களின் பக்கம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதே நேரத்தில் பழனிசாமியை தலைவராக்க 17 எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ளனர். பழனிசாமி பக்கம் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்பு தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவும் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. ஆனால், தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நிரந்தரமாக மூன்றாவது கட்சியாகி கரைந்து விடுவோம் என பழனிசாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றியதாக சொல்லப்படுகிறது. அதிகம் உறுப்பினர்களை கொண்ட வேலுமணி - சண்முகம் தரப்பு தவெகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் அமைச்சரவையில் இணையும் திட்டமும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்க மாட்டேன் என சொல்லியுள்ள தவெக, அதிமுகவின் ஆதரவை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதுபோல பாஜகவின் ஆதரவு வேலுமணிக்கா, பழனிசாமிக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே பல பிளவுகளையும், முக்கிய தலைவர்களையும் இழந்து, தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் அதிமுக தொண்டர்கள், இன்னொரு பிளவை தாக்கிக் கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான்.

‘எனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் இருக்கும்’ என சட்டப்பேரவையில் முழங்கியவர் ஜெயலலிதா. ஆனால் அவர் உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆகும் முன்பே, சுக்கு நூறாக நொறுங்கிப் போயிருக்கிறது அக்கட்சி. இப்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்குள்ளேயே வெடித்துள்ள மோதல், கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது.

தமிழக அரசியல் களம், தவெக – திமுக என மாறும் நிலையில், பிரதான கட்சியான அதிமுகவில் வெடித்துள்ள கலகம், அக்கட்சியினரை வேறு கட்சிகளை நோக்கி வேகமாக நகர்த்தும் என்பதை தலைவர்கள் உணரவேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.