惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Blog — PlanetScale
Blog — PlanetScale
Y
Y Combinator Blog
G
Google Developers Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
V
Visual Studio Blog
H
Help Net Security
Stack Overflow Blog
Stack Overflow Blog
aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园_首页
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - Franky
B
Blog RSS Feed
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
月光博客
月光博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“எதைச் செய்ய வேண்டும் என்று ஆட்டம் சொல்லிக் கொடுக்கும்” -...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 103 ரன்​கள் வித்தியாசத்தில் தோற்​கடித்து அசத்​தி​யது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்​தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் 54 பந்​துகளில் 101 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். 208 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை அணி 19 ஓவர்​களில் 104 ரன்​களுக்கு சுருண்​டது. அதி​கபட்​ச​மாக திலக் வர்மா 37, சூர்​யகு​மார் யாதவ் 36 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற அனைத்து பேட்​ஸ்​மேன்​களும் ஒற்றை இலக்க ரன்​னில் நடையை கட்​டினர்.

சிஎஸ்கே அணிக்கு இது 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. இந்த வெற்​றி​யின் வாயி​லாக சிஎஸ்கே அணி 8 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 5-வது இடத்​துக்கு முன்​னேறியது. ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்​சன் கூறிய​தாவது: நான் விஷ​யங்​களை எளிமை​யாக வைத்​திருக்க முயற்சி செய்​கிறேன். வான்​கடே ஆடு​களம் வழக்​க​மானது போன்று இல்​லை. பந்து சற்று நின்று வந்​தது. எனவே, அந்​தச் சூழலில் இருந்து அணிக்கு என்ன தேவை என்​பதை மதிப்​பிடு​வதே எனது வேலை​யாக இருந்​தது.

நாங்​கள் சில விக்​கெட்​டு​களைத் தொடர்ந்து இழந்து கொண்​டிருந்​தோம், எனவே நிலைத்து நின்று விளை​யாடும் ஒரு பேட்​ஸ்​மேன் களத்​தில் இருக்க வேண்​டியது அவசி​யம் என்று நான் நினைத்​தேன். அதையே நான் செய்ய முயற்​சித்​தேன். அது சரி​யாக நடந்​தது. ஆட்​டம் எதைச் செய்ய வேண்​டும் என்று உங்​களுக்​குச் சொல்​லிக் கொடுக்​கும்.

நான் இப்​படித்​தான் விளை​யாடு​வேன், இதையே​தான் செய்​வேன் என்று முன்​கூட்​டியே ஒரு எண்​ணத்​துடனோ அல்​லது திட்​ட​மிட்ட மனநிலை​யுடனோ வர வேண்​டிய அவசி​யமில்​லை. ஆட்​டத்​தின் சூழ்​நிலை​யை​யும், அணிக்கு எது தேவை என்​ப​தை​யும் புரிந்​து​கொண்​டு, அதற்கு ஏற்​ற​வாறு திட்​ட​மிட்டு விளை​யாடு​வதே எனது பொறுப்​பு. விக்​கெட்​டு​கள் அடுத்​தடுத்து விழாமல் இருந்​திருந்​தால், நான் இன்​னும் சற்று முன்​ன​தாகவே அதிரடி​யாக விளை​யாடத் தொடங்​கி​யிருப்​பேன். ஆனால், விக்​கெட்​டு​கள் சரிந்​த​தால், இன்​னிங்ஸை சிறப்​பாக முடித்​துக் கொடுக்க வேண்​டியது அவசி​ய​மான​தாக இருந்​தது. இவ்​வாறு அவர் கூறி​னார்.