惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
小众软件
小众软件
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - Franky
Jina AI
Jina AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
V
Visual Studio Blog
C
Check Point Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
U
Unit 42
量子位
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
B
Blog RSS Feed
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
美团技术团队
L
LangChain Blog
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் வாங்கிய மதுவை தமிழகம் கொண்டு வருவது குற்றம...
2026-04-28 · via hindutamil

கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் கடந்த ஆண்டு ஜனவரியில் புதுச்சேரி - தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காட்டுமயிலூரைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது அவரிடமிருந்து புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு லிட்டர் 680 எம்.எல் எடையளவு கொண்ட 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வல்லரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பாலாஜி, “தனிநபரின் சொந்த பயன்பாட்டுக்காக நான்கரை லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ள தமிழக அரசின் 1996-ம் ஆண்டு மதுபான விதிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு கடந்த 2017-ல் அரசாணை பிறபித்துள்ளது. எனவே மனுதாரர் தனது சொந்த பயன்பாட்டுக்காக ஒரு லிட்டர் 680 எம்.எல் மதுபானம் வைத்திருந்தது சட்டவிரோதமா னது அல்ல. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால் அரசு தரப்பில், மனுதாரர் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை சட்டவிரோதமாக தமிழகத்துக்குள் கொண்டு வந்து மற்றவர்களுக்கு விற்பனை செய்துள்ளார். எனவேதான் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனிநபர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக நான்கரை லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதல்ல எனக் கூறி மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற வளாகங்களில் விற்கப்படும் மதுபானம் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மதுபானங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

பிற மாநில மதுபானங்கள் மற்றும் மாநில அரசின் அறிக்கை, பிராண்ட் அறிமுக அரசாணை, இறக்குமதி அனுமதிகள் மூலம் குறிப்பிடப்படாத மதுபானங்களை அதிகபட்ச வரம்பான நான்கரை லிட்டர், 7.8 லிட்டர் அளவுக்கு பீர் அல்லது 9 லிட்டர் அளவுக்கு ஒயின் ஆகியவற்றை தனிப்பட்ட பயன்பாட்டுக்கோ அல்லது விற்பனைக்காகவோ வைத்திருப்பது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவு 4(1) (சி) மற்றும் 14-இன் கீழ் குற்றமாகும். எனவே புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக 90 எம்.எல் மதுபாட்டிலை தமிழகத்துக்குள் கொண்டு வந்தாலும் குற்றமே. அதன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.

தமிழக அரசு முறையீடு:

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க கோரிய மனுவை நாளை விசாரணைக்கு எடுக்கக் கோரி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு முறையீடு செய்தார். அப்போது அவர், ‘நீதிமன்ற உத்தரவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் அரசாணை புதுச்சேரி மாநில மதுபானத்துக்கு பொருந்தாது.

பிற மாநில மதுபானங்கள், மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் அதனை வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என அரசு தரப்பில் ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார். தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்ற நீதிபதி, விளக்கம் கோரிய மனுவை நாளை (ஏப்.29) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதியளித்துள்ளார்.