

















ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளி அளவில், 352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 93 நடுநிலைப்பள்ளிகள், 49 உயர்நிலைப் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 5 பகுதி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 3 ஆதி திராவிடர் பள்ளி, ஒரு சமூக நலப்பள்ளி, 32 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 10 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஒரு பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி என, மொத்தம் 554 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை குறைந் துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: கடந்த 2025-2026-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 2,183 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 1,689 ஆக குறைந்துள்ளது.
494 மாணவர்கள் அரசு பள்ளியிலிருந்து வெளியேறி உள்ளனர். 2025-26-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 35,446 மாணவர்கள் படித்த நிலையில், நடப்பாண்டு மாணவர்களின் எண்ணிக்கை 32,437 ஆக குறைந்துள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。