惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
The Cloudflare Blog
J
Java Code Geeks
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Tailwind CSS Blog
L
LangChain Blog
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
I
InfoQ
博客园 - 司徒正美
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
H
Help Net Security
博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: ம...
அனலி · 2026-05-25 · via hindutamil

Updated on: 

சென்னை: கூட்டுறவு வங்கிகளின் மூலம் 2025 மே 1-ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28 வரை பெற்ற ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என்.மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

முழுமையாக இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடன் தொகை ரூ.50,000 வரையில் எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழ்வதும் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு 50% வரை தள்ளுபடி.

கடன் தொகை ரூ.50,001-ரூ.60,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.60,001-70,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.70,001-80,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.80,001-90,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.90,001-1,00,000 வரை எனும் பட்சத்தில் குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி, அதே கடன் தொகைக்கு, சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.

கடன் தொகை ரூ.1 லட்சத்துக்கும் மேல் எனும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி, அதே தொகுக்கு சிறு விவசாயிகளுக்கும் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14.22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.