惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
雷峰网
雷峰网
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
IT之家
IT之家
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
B
Blog RSS Feed
H
Help Net Security
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
L
LangChain Blog
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சுற்றுலா மையமாகுமா கூழையாறு கடற்கரை?
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நவக்கிரகத் தலங்கள் மற்றும் புகழ் பெற்ற கோயில்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் கூழையாறு கடற்கரையை சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கூழையாறு கடற்கரை, இயற்கை அழகுடன் காட்சியளித்து வருகிறது. இப்பகுதியில் பரந்தளவில் சவுக்குமரக் காடுகள் காணப்படுகின்றன.

மேலும், கடற்கரைப் பகுதியில் கருங்கல் தடுப்புகள் அமைக்கப்படாததால், இயற்கையான கடல் தோற்றம் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால், இயற்கைச் சூழலை ரசிக்க விரும்பும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், கடற்கரையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதால், குடும்பத்துடன் வர விரும்பும் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு அருகிலுள்ள கடற்கரையாக கூழையாறு கடற்கரை அமைந்துள்ளது.

எனவே, இதை சுற்றுலா மையமாக அறிவித்து மேம்படுத்தினால், உள்ளூர் மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் இயற்கைச் சுற்றுலா வாய்ப்பு கிடைப்பதுடன், அரசுக்கும் வருவாய் ஈட்டும் வாய்ப்பு உருவாகும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து கொள்ளிடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.பிரபு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் சுற்றுலா மையங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு கடல் அரிப்பைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் கருங்கல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், கடலில் இறங்கி குளிக்க விரும்புவோர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

<div class="paragraphs"><p>கூழையாறு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர கட்டப்பட்டுள்ள காத்திருப்பு கூடம்.</p></div>

கூழையாறு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர கட்டப்பட்டுள்ள காத்திருப்பு கூடம்.

ஆனால், கூழையாறு கடற்கரை இயற்கை அழகுடன் காணப்படுவதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், இயற்கை சூழலைரசிக்கவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டது. மேலும், குளியலறை, கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பயன்பாட்டில் இல்லை.

எனவே, கூழையாறு கடற்கரையை சுற்றுலா மையமாக அறிவித்து, மின்விளக்கு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும், கூழையாறு மற்றும் திருமுல்லை வாசல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சிறு வணிகங்கள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளும் உருவாகும் என்றார்.