惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
Recent Announcements
Recent Announcements
G
Google Developers Blog
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Google DeepMind News
Google DeepMind News
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
C
Check Point Blog
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Microsoft Security Blog
Microsoft Security Blog
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
量子位
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் 6 பேரை வெட்டிய சம்பவ...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

Updated on: 

தென்காசி: ஆலங்​குளம் அருகே திருமண நிகழ்ச்​சி​யில் புகுந்து 6 பேரை வெட்​டி​விட்டு தப்​பிச் சென்ற சம்​பவத்​தில் 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

ஆலங்​குளம் அருகே நேற்​று ​முன்​தினம் நெட்​டூரில் நடந்த திருமண விழா​வில் புகுந்த கும்​பல் அரி​வாள், கத்தி போன்ற ஆயுதங்​களால் அங்கு இருந்​தவர்​களை சரமாரி​யாக வெட்​டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்​தனர்.

இந்த தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்​யக்​கோரி நெட்​டூரில் ​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். தாக்​குதல் சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை பிடிக்க மாவட்​டம் முழு​வதும் வாகன சோதனை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. இதில் 3 சிறு​வர்​கள் உள்பட 8 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து தென்​காசி மாவட்ட காவல்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: திருநெல்​வேலி பிரம்​மதேசம் பகு​தி​யில் மணி​கண்​டன் என்​பவரை கடந்த 28-ம் தேதி இருசக்கர வாக​னங்​களில் வந்த கும்​பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்​டி, அவரது இடது கை விரலில் காயம் ஏற்​படுத்​தி​யது. அதே கும்​பல், வாகைகுளம் பகு​தி​யில் உள்ள சிற்​பக்​கலை தொழிற்​கூட உரிமை​யாளர் செல்வ கணேசன் என்​பவரை மிரட்டி பணம் பறிக்​கும் நோக்​கத்​தில் சென்​றது. அங்கு அவர் இல்​லாத​தால், அங்​கிருந்த பொருட்​களை சேதப்​படுத்​தி, பணி​யாளர் செல்​போனை பறித்​துச் சென்​றனர். வழி​யில் மேலும் ஒரு​வரை தாக்கினர்.

இதனைத் தொடர்ந்​து, 29-ம் தேதி நெட்​டூர் பகு​தி​யில், முன்​விரோதம் தொடர்பான தகராறின் காரண​மாக இருசக்கர வாக​னங்​களில் வந்த அதே கும்​பல் 6 பேரை தாக்​கியது. அங்​கிருந்து தப்​பிச் செல்​லும்​போது மானூர் அருகே தெற்​குப்​பட்டி பகு​தி​யில் அதிவேக​மாகச் சென்​றுள்​ளனர். இதை தட்​டிக் கேட்ட முபாரக், அப்​துல் ரஹு​மான் ஆகியோரையும் தாக்​கி​விட்டு தப்​பினர்.

இந்த தொடர் தாக்​குதல் சம்​பவங்​கள் குறித்து அம்​பாச​முத்​திரம், ஆலங்​குளம், மானூர் காவல் நிலை​யங்​களில் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்நிலையில் இந்த தாக்​குதல் சம்​பவங்​களில் தொடர்​புடைய 3 சிறார்​கள் உள்பட 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். தலைமறை​வாக உள்ள மேலும் சிலரை பிடிக்க போலீஸார் தரப்பில் தீவிர நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.