

















Updated on
:
1 min read
தமிழில் ஃபகத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘96’, ‘மெய்யழகன்’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் ஃபகத் பாசில். ஆனால், அதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதனை மேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.
தற்போது இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32-வது படம் இதுவாகும். இப்படத்தின் மூலம் ஃபகத் பாசில் - பிரேம்குமார் கூட்டணி உருவாகிறது. இதில் ஷிவதா நாயர் முக்கிய கதாபாத்தில் நடிக்கவுள்ளார்.
பிரேம் குமாரின் முந்தைய படங்களை போல இப்படத்துக்கும் கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். ஃபகத் பாசில், ஷிவதா நாயகர் ஆகியோருடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。