惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
G
Google Developers Blog
J
Java Code Geeks
C
Check Point Blog
Last Week in AI
Last Week in AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 司徒正美
IT之家
IT之家
Martin Fowler
Martin Fowler
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
U
Unit 42
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டு...
2026-05-04 · via hindutamil

Updated on

2 min read

மதுரை: அம்​பேத்​கரை சாதித் தலை​வ​ராகப் பார்க்​கும் நிலையை மாற்ற, தமிழகத்​தில் 2027-28 கல்வி ஆண்​டிலிருந்து 3 முதல் 10-ம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்​களுக்கு கற்​பிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

காரைக்​குடியைச் சேர்ந்​தவர்​கள் ராஜேஷ் என்ற ராஜேஷ்குமார், விஜய் என்ற விஜயகுமார். இவர்​கள் புலிக்​குத்தி பேருந்து நிறுத்​தம் பகு​தி​யில் ஒட்​டப்​பட்​டிருந்த அம்​பேத்​கரின் சுவரொட்​டியைச் சேதப்​படுத்தி அதை வீடியா பதிவு செய்து சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​ட​தாக விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி நிர்​வாகி போலீ​ஸில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் இரு​வர் மீதும் சோம​நாத​புரம் போலீ​ஸார் எஸ்​.சி. எஸ்​.டி.வன்​கொடுமைச் சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்​தனர். இந்​நிலை​யில் இரு தரப்​பினர் இடையே சமரசம் ஏற்​பட்​டுள்​ள​தால் கீழமை நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை ரத்து செய்​யக்​கோரி இரு​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிபதி எல்​.விக்​டோரியா கெளரி விசா​ரித்​தார்.

ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, ‘மனு​தா​ரர்​களிடம் அம்​பேத்​கர் குறித்து சரி​யான புரிதல் இல்​லை. இரு​வரும் தலா 101 அம்​பேத்​கர் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்​கி, அதில் ஒன்றை படிக்க வைத்​துக்​கொண்​டு, மற்ற புத்​தகங்​களை டி.கல்​லுப்​பட்​டி​யில் உள்ள முரு​கப்பா அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் படிக்​கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்​களுக்​கும், மற்ற வகுப்பு மாணவர்​களுக்​கும் வழங்க வேண்​டும்.

இரு​வரும் புத்​தகத்தை முழு​மை​யாகப் படித்து வாய்​மொழித் தேர்​வுக்கு தயா​ராக இருக்க வேண்​டும். மேலும், அடை​யாறு புற்​று​நோய் நிறு​வனத்​துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும்’ என உத்​தர​விட்​டார்.

அடுத்த விசா​ரணை​யின்​போது, மனு​தா​ரர்​கள் இரு​வரிட​மும் அம்பேத்கரின் வாழ்க்கை மற்​றும் பணி​கள் தொடர்​பாக 30 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன. இரு​வரும் திருப்​தி​கர​மாக பதிலளித்​தனர். இதையடுத்து, புகார்​தா​ரரும் வழக்கை முடிக்க சம்​மதம் தெரி​வித்​தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: அம்​பேத்​கரின் வாழ்க்கை மற்​றும் பங்​களிப்​பு​கள் பற்றி இளைஞர்​களுக்கு ஆழமாகக் கற்​பிக்​கப்​பட​வில்​லை. அவரை சாதிக் கண்​ணோட்​டத்​தில் பார்க்​கக் கூடாது.

அவர் முழுதேசத்​துக்​கும் சொந்​த​மானவர். அவரைப் பற்றி மாணவர்​களுக்​குக் கற்​பிக்க வேண்​டும். இந்த வழக்​கில் தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறைச் செயலர் ஆகியோர் எதிர்​மனு​தா​ரர்​களாகச் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

இவர்​கள் மாநிலப் பாடத்​திட்​டத்​தில் மூன்​றாம் வகுப்பு முதல் பத்​தாம் வகுப்பு வரையி​லான சமூக அறி​வியல் பாடத்​தில் இந்​திய அரசி​யலமைப்பு சட்ட வரைவுக் குழு​வின் தலை​வ​ராக அம்​பேத்​கர் ஆற்​றிய பங்​கு, நீதி, சுதந்​திரம், சமத்​து​வம் மற்​றும் சகோ​தரத்​து​வம் ஆகிய அரசி​யலமைப்பு தொலைநோக்​குப் பார்​வைக்கு அவர் ஆற்​றிய பங்​களிப்​பு, சுதந்​திரப் போராட்ட இயக்​கத்​தி​லும் ஜனநாயக தேசத்​தைக் கட்​டமைப்​ப​தி​லும் அவர் ஆற்​றிய பங்​கு, பொருளா​தா​ரம், சட்​டம் மற்​றும் சமூக சிந்​தனை ஆகிய துறை​களில் அவர் ஆற்​றிய கல்​வி​சார் சாதனை​கள் ஆகிய தலைப்​பு​களில் பாடங்​களை கற்​பிக்க வேண்​டும்.

இந்​தப் பாடத் திட்​டத்தை 2027- 2028 கல்​வி​யாண்டு முதல் அமல்​படுத்த அரசு முன்வர வேண்​டும். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​பட்​டது தொடர்​பாக தலை​மைச் செயலர், பள்ளி கல்​வித்​துறை செயலர் ஆகியோர் 2027 ஜன.21-ம் தேதி விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். மனு​தா​ரர்​கள் மீதான வழக்கு ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறி​யுள்​ளார்.