惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
IT之家
IT之家
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 【当耐特】
V
V2EX
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
The GitHub Blog
The GitHub Blog
S
SegmentFault 最新的问题
F
Fortinet All Blogs
I
InfoQ
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ என்ற பெயரில் பெண்களின் பொருளாத...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: எதிர்​கால தேவை​களுக்​கான நிதி திட்​ட​மிடல், முதலீடு​கள் குறித்து மக்​கள் ஆராய்ந்து முடி​வெடுக்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த ‘இந்து தமிழ் திசை’ - கனரா ரோபேகோ மியூச்​சுவல் ஃபண்ட் சிறப்பு நிகழ்ச்​சி​யில் அறி​வுரை வழங்​கப்​பட்​டது.

பல்​வேறு துறை​களில் பல வழி​காட்டு நிகழ்ச்​சிகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து நடத்தி வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக கனரா ரோபேகோ மியூச்​சுவல் ஃபண்ட் நிறு​வனத்​துடன் இணைந்து ‘பெண்​கள் பலம் வாழ்​வா​தா​ரம்’ எனும் பெண்​களுக்​கான பொருளா​தார முன்​னேற்​றத்தை வலி​யுறுத்​தும் சிறப்பு நிகழ்ச்​சியை சென்னை மயி​லாப்​பூரில் நேற்று முன்​தினம் நடத்​தி​யது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற கோர் பாங்​கிங் சேனல் மற்​றும் இன்​ஸ்​டி டியூஷனல் சேல்ஸ் நேஷனல் ஹெட் கே.கோபி​நாத் பேசி​ய​தாவது: நிதி முதலீடு​களை எவ்​வளவு சீக்​கிர​மாக தொடங்​கு​கிறோமோ, அந்த அளவுக்கு அதன் பலன்​களும் அதி​க​மாக இருக்​கும்.

பொது​வாக நிலை​யான வைப்பு நிதி (எஃப்​டி) போன்ற சேமிப்​பு​கள் வழக்​க​மான வரு​மானத்​துக்கு உதவக்​கூடும். ஆனால், நீண்​ட​கால அடிப்​படை​யில் செல்​வத்தை உரு​வாக்​கு​வதற்கு மியூச்​சுவல் ஃபண்ட் முதலீடு​கள் ஒரு சிறந்த வாய்ப்​பாக இருக்​கும். மியூச்​சுவல் ஃபண்ட் என்​றாலே பங்​குச்​சந்தை ஆபத்து நிறைந்​தது என்ற பொது​வான கருத்து உள்​ளது.

ஆனால் இதில் பங்​குச்​சந்தை தொடர்பு இல்​லாத அரசுப் பத்​திரங்​களில் மட்​டுமே முதலீடு செய்​யப்​படும் பாது​காப்​பான திட்​டங்​களும் உள்​ளன. எனவே எதிர்​கால தேவை​களை திட்​ட​மிடும்​போது எதார்த்​த​மான கணக்​கீடு மிக முக்​கி​யம். பள்​ளிக் கட்டண உயர்​வு, அன்​றாட பயன்​பாட்டு பொருட்​களின் விலை உயர்வு போன்​றவற்றை நம்​மால் தவிர்க்க முடி​யாது.

பணவீக்​கத்​தின் காரண​மாக எதிர்​காலத்​துக்கு மட்​டுமின்​றி, தற்​போதையை வாழ்க்கை முறையை தக்க வைத்​துக் கொள்​வதற்கே கூடு​தல் நிதி தேவைப்​படு​கிறது. இதற்கு மேலாக, எதிர்​பா​ராமல் வரும் மருத்​து​வச் செல​வு​கள் வேறு. எனவே முதலீடு​கள் குறித்து மக்​கள் போதிய விழிப்​புணர்​வுடன் ஆராய்ந்து முடி​வெடுக்க வேண்​டும்.

மக்​கள் தங்​களுக்​குப் பொருத்​த​மான திட்​டங்​களைத் தேர்ந்​தெடுத்து முதலீடு செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்து பொருளா​தார நிபுணர் சோம.வள்​ளியப்​பன் பேசுகை​யில், “கல்​வி, தகவல் தொழில்​நுட்​பம் என அனைத்து துறை​களி​லும் பெண்கள் சாதனை படைத்து வரு​கின்​றனர்.

எனினும் நிதி சார்ந்த முதலீட்டு முடிவு​களில் பெண்​களின் பங்​களிப்பு குறை​வாகவே உள்​ளது. பெண்​கள் தங்​களது சேமிப்பு பழக்​கத்தை முதலீ​டாக மாற்ற முன்வர வேண்​டும். அஞ்​சறைப் பெட்​டி​யிலும், வீட்​டிலும் பணத்தை பூட்டி வைப்​பது பணவீக்​கத்​தின் காரண​மாக அதன் மதிப்பை இழக்​கச் செய்​யும்.

பெண்​கள் தங்​களின் சேமிப்பை சரி​யான முதலீட்​டுத் திட்​டங்​களில் ஈடு​படுத்​தி, நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி​யோடு தங்​களின் பொருளா​தார நிலை​மை​யை​யும் உயர்த்​திக்​கொள்ள வேண்​டும்.

இளைஞர்​கள் அதி​கம் உள்ள நாடாக இந்​தியா திகழ்​வ​தால், அடுத்த சில தசாப்​தங்​களுக்கு நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி மிகச் சிறப்​பாக இருக்​கும். இந்த வளர்ச்​சியை முதலீட்​டாளர்​கள் தங்​களுக்​குச் சாதக​மாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்” என்று குறிப்​பிட்​டார்.

இதையடுத்து நடை​பெற்ற கேள்​வி-ப​தில் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பெண்​கள் பலரும் பரஸ்பர நிதி​யில் முதலீடு செய்​வது குறித்த தங்​களது சந்​தேகங்ளை நிபுணர்​கள் கே.கோபி​நாத், சோம.வள்​ளியப்​பன் ஆகியோரிடம் கேட்​டறிந்​தனர்.

அதற்கு பதிலளித்த இரு​வரும் சேமிப்​பில் முதலீடு செய்​யும் முறை​கள், அதன்​மூல​மாக பெண்​கள் தங்​களது பொருளா​தார முன்​னேற்​றத்தை அடைவதற்​கான ஆலோ​சனை​கள் மற்​றும் வழி​காட்​டு​தல்​களை வழங்​கி, அவர்​களது சந்​தேகங்​களை தீர்த்​து வைத்​தனர்​.