惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
B
Blog
MyScale Blog
MyScale Blog
V
V2EX
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
量子位
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
L
LangChain Blog
I
InfoQ
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
V
Visual Studio Blog
月光博客
月光博客
The Cloudflare Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும்: மாணவர்களுக்கு நீதிபதி ஜ...
2026-04-26 · via hindutamil

புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் ஆகியோர்.

Updated on

1 min read

கேளம்பாக்கம்: புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் கவுரி ரமேஷ் தலைமை வகித்தார். புதுப்பாக்கம் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ஜெயகவுரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா. சரவணன் ஆகியோர் பங்கேற்று 600 இளங்கலை மாணவ, மாணவிகளுக்கும், 30 முதுகலை மாணவ, மாணவிகளுக்கும் பட் டங்களை வழங்கினர்.

அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசியதாவது, வழக்கறிஞர் தொழில் உன்னதமானது. இத்தொழிலில் வழக்கறிஞர் பேசுவதற்கு முன்பாகவே அவர் எப்படி என்று மதிப்பீடு செய்து விடுவார்கள். எனவே தோற்றம், கம்பீரம் இவை அனைத்தும் முக்கியம். நீதிமன்ற வழக்கறிஞர் உடைக்கு மதிப்பு உண்டு. அதை எப்போதும் நாம் மரியாதையுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மரியாதை என்பது பலவீனம் அல்ல. அது ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய பலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேசும் விதம், அமைதி, குரல் இவை உங்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. நீதிமன்றத்தில் நாம் குரலை உயர்த்தி பேசி வாதாடினால் ஜெயித்து விடுவோம் என்று எண்ணி விடாதீர்கள். அமைதியாக பேசி வாதாடி வெற்றி பெற்ற விஷயங்கள் அதிகம் உண்டு. சத்தமாக வாதாடினால் வெற்றி பெற முடியாது, சரியான முறையில் வாதாடினால் தான் வெற்றி பெற முடியும். கடந்த காலங்களை விட தற்போது உள்ள கால கட்டத்தில் சட்டக் கல்வி வேகமாக வளர்ந்து வருகிறது.

சட்டத்தை ஆழமாக படிக்க வேண்டும். தீர்ப்புகளை முழுமையாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் அதிகமாக வாதாடுவது கூட சில நேரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே துல்லியமாக, முக்கியமானதை சுருக்கமாக வாதாடினாலே வெற்றி தரும். நேர்மையாக. உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நீதிமன்றமும் நீதிபதிகளும் உங்களை நம்புவார்கள். பணம் படைத்தவர்களாக இருந்தாலும், எளியவர்களாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். அனைவரையும் சமமாக மதிப்பது நற்பண்பு. இவ்வாறு அவர் கூறினார்.

பட்டறைப் பெரும்புதூர் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, பேராசிரியர்கள். அலுவலக பணியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.