



















Updated on
:
2 min read
ஐபிஎல் தொடரில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பவுலர்களின் சிம்ம சொப்பனமான இளங்காளை சூரியவன்ஷியை இன்று பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொள்கிறது. அன்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் கண்ட சூரியவன்ஷியை எப்படி இன்று கட்டுப்படுத்துவது என்பதுதான் பஞ்சாப் அணியின் பிரதான இலக்காக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் எல்லா பெரிய பவுலர்களையும், பும்ரா, கமின்ஸ், ஹாசில்வுட், ரபாடா என்று பதம் பார்த்து வரும் சூரியவன்ஷியை எப்படி இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.
இந்திய முன்னாள் ஒன் டவுன் வீரர் செடேஷ்வர் புஜாரா தன் பங்குக்கு சிலபல அட்வைஸ்களை அளித்துள்ளார். அதாவது அர்ஷ்தீப் சிங் சூரியவன்ஷிக்கு வீசும் போது மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து வெளியே ஸ்விங் செய்ய வேண்டும் என்கிறார். இன்று முல்லான்பூரில் சூரியவன்ஷியின் தகிக்கும் பேட்டிங்கா அல்லது பஞ்சாப் கிங்ஸின் சேசிங்கா என்பது பெரிய சுவாரஸ்யமாக இந்தப் போட்டியை மாற்றியுள்ளது.
ஸ்டார் ஸ்போர்டிஸிற்காக புஜாரா கூறியதாவது:
“அர்ஷ்தீப் சிங் ஒரு இடது கை ஸ்விங் பவுலர் என்பதால் வைபவ் சூரியவன்ஷிக்கு ஓவர் த ஸ்டம்பில் வீச வேண்டும். மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசி அவுட் ஸ்விங்கராக சூரியவன்ஷியின் மட்டைக்கு வெளியே இழுக்க வேண்டும். மோசின் கான் இப்படி வீசித்தான் வைபவ் சூரியவன்ஷியை கட்டுக்குள் வைத்ததோடு வீழ்த்தியும் விட்டார். அர்ஸ்தீப் சிங் அதே போல்தான் வீச வேண்டும்.
மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பேக் ஆஃப் லெந்த்தில் வீச வேண்டும். ஆஃப் ஸ்டம்ப் காரிடாரை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். அதே போல் ஸ்லோயர் ஒன் பந்துகள், யார்க்கர் போன்ற ஆயுதங்களையும் பிரயோகிக்க வேண்டும். ஆனால் முதல் 4-5 பந்துகள் மிடில் அண்ட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பேக் ஆஃப் லெந்த்தில் பந்தை பிட்ச் செய்து வெளியே ஸ்விங் செய்ய வேண்டும்.
கடந்த போட்டியில் சதம் அடித்த வைபவ் நிச்சயம் அதே பாணியில்தான் பேட் செய்வார். எனவே மார்க்கோ யான்சென், அர்ஸ்தீப் சிங் ஆகியோரையும் அடித்து நொறுக்கவே வைபவ் பார்ப்பார். பார்ட்லெட் கடந்த போட்டியில் சரியாக வீசவில்லை. 4 ஓவர்களில் 50க்கும் மேல் வாரி வழங்கினார் அவர். டெல்லிக்கு எதிராக 60 ரன்கள் பக்கம் கொடுத்தார் பார்ட்லெட். எனவே பார்ட்லெட் நிச்சயம் கடும் நெருக்கடியில் இருப்பார். சூரியவன்ஷி அதைப் பயன்படுத்தப் பார்ப்பார். ” என்றார்.
வைபவ் சூரியவன்ஷி இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 357 ரன்களை 44.62 என்ற சராசரியில் 235 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。