惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
博客园 - Franky
Microsoft Security Blog
Microsoft Security Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
H
Help Net Security
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மோடியின் பொருளாதார நடவடிக்கைகள் அமெரிக்காவை சமாதானப்படுத...
மோகன் கணபதி · 2026-06-24 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: “பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கை அமெரிக்காவை சமாதானப்படுத்துவதாகவும், சீனாவிடம் சரணடைவதாகவும் உள்ளது” என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா உடனான இந்தியாவின் சரக்கு வர்த்தக உபரி கடந்த 2024-25 நிதி ஆண்டில் 40.1 பில்லியன் டாலராக இருந்தது. அது, 2025-26 நிதி ஆண்டில் 34.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல், சீனா உடனான இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் 99.2 பில்லியன் டாலராக இருந்தது. 2025-26ம் நிதி ஆண்டில் இது 112.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கை என்பது அமெரிக்காவை சமாதானப்படுத்துவதாகவும், சீனாவிடம் சரணடைவதாகவும் உள்ளது” என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதவில், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “90 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.

ஆனால், மோடி அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அதோடு, மாணவர்களின் குரலை பயங்கரவாதம் என முத்திரை குத்துகிறார். விவசாயிகளை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வாழ்வோர் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி இழிவுபடுத்தியதை நாடு இன்னும் மறக்கவில்லை. இந்த அரசை யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். மாணவர்களின் குரல் நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும்; மோடி அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியே தீர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.