



























Updated on
:
1 min read
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள தங்கத்தின் இருப்புகளுக்கு மாற்றாக தங்கப் பத்திரங்களை வெளியிட அல்லது அவற்றை பணமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லது மத அமைப்புகளின் பொறுப்பில் உள்ள தங்கத்தை பணமாக்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிடுகிறது என்பது எந்த அடிப்படையும் இல்லாத முற்றிலும் தவறான வதந்தியாகும்.
கோயில் கோபுரங்கள், கதவுகள் அல்லது இதர கோயில் அமைப்புகளின் மீதுள்ள தங்கத்தகடுகளை இந்தியாவின் தங்க இருப்புகளாக கருதுவதாக பரவும் செய்திகளும் முற்றிலும் அடிப்படையற்ற தவறான தகவல்.
மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தெளிவுப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகிறது.
எனவே அனைத்து குடிமக்களும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்துகிறது. கொள்கை முடிவுகள் அல்லது அரசுத்திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்திகள், அரசு இணையதளங்கள் மற்றும் பொது தகவல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。