惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 【当耐特】
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
小众软件
小众软件
I
InfoQ
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை - நட...
2026-05-18 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: பிரபல திரைப்​படத் தயாரிப்பாளர் கே.​ராஜன், சென்​னை​யில் அடை​யாறு ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். அவருக்கு வயது 85. சென்னை அடை​யாறு திரு.​வி.க. பாலம் வழி​யாக நேற்று மாலை ஏராள​மான வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன.

மாலை 4.25 மணி அளவில், அந்த வழி​யாகச் சென்ற கார் ஒன்று அடை​யாறு பாலத்​தில் நின்​றது. வெள்ளை முழுக்கை சட்​டை, கருப்பு நிற பேன்ட் அணிந்த முதி​ய​வர் ஒரு​வர் காரில் இருந்து இறங்​கி​னார். திடீரென பாலத்​தின் கைப்​பிடிச் சுவர் மீது ஏறிய அவர், அடை​யாறு ஆற்​றில் குதித்​தார்.

இதைக் கண்​டு, அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் அதிர்ச்சி அடைந்​தனர். ஆற்​றில் தத்​தளித்​தவரை மீட்க முயன்​றனர். தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் கொடுத்​தனர்.

மயி​லாப்​பூர், சைதாப்​பேட்​டை​யில் இருந்து 2 வாக​னங்​களில் வந்த தீயணைப்பு படை வீரர்​கள், ரப்​பர் படகு மூலம் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் ஒரு மணி நேரத்​துக்​குப் பிறகு, முதி​ய​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.

இதற்​கிடையே, அடை​யாறு போலீ​ஸாரும் விரைந்து வந்​தனர். ஆற்​றில் குதித்து தற்​கொலை செய்து கொண்​டது பிரபல திரைப்​படத் தயாரிப்​பாளர் கே.​ராஜன் (85) என்​பது தெரிய​வந்​தது.

போலீ​ஸார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பினர். அவரது குடும்​பத்​தினருக்​கும் தகவல் கொடுத்​தனர். அடை​யாறு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தற்கொலை குறித்து போலீஸ் தரப்​பில் கூறிய​தாவது: தயாரிப்​பாளர் கே.​ராஜனுக்கு மனை​வி, 3 மகன், ஒரு மகள் உள்​ளனர். அவர்​கள் சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் வசிக்​கின்​றனர்.

அவர்​களு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக சமீப​கால​மாக ராஜன் மட்​டும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஓட்​டலில் அறை எடுத்து தங்கி இருந்​துள்​ளார்.

குடும்ப பிரச்​சினை​யா?

நேற்று காரில் வேளச்​சேரி சென்​று​விட்டு திரும்​பும் வழி​யில் அடை​யாறு திரு.​வி.க பாலம் வந்​ததும் காரை நிறுத்​து​மாறு ஓட்​டுநர் தனசேகரனிடம் கூறி​யுள்​ளார். ‘மெது​வாக காரில் செல்​லுங்​கள். சிறிது தூரம் காலாற நடந்து வரு​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

ஓட்​டுநர் காரை நிறுத்​தி​யதும், இறங்​கிச் சென்று ஆற்​றில் குதித்​துள்​ளார். தற்​கொலைக்கு காரணம் குடும்ப பிரச்​சினை​யா, கடன் தொல்​லையா என்று பல கோணங்​களில் விசா​ரணை நடந்து வரு​கிறது. இவ்​வாறு போலீஸ் தரப்​பில் கூறப்​படு​கிறது.

கடந்த 1983-ல் சுரேஷ் நடித்து வெளி​யான ‘பிரம்​மச்​சா​ரி​கள்’ திரைப்​படம் மூலம் தயாரிப்​பாளர் ஆனவர் கே.​ராஜன். ‘டபுள்​ஸ்’, ‘அவள் பாவம்’, ‘நினைக்​காத நாளில்​லை’ உட்பட சில திரைப்​படங்​களை தயாரித்​துள்​ளார்.

‘நம்ம ஊரு மாரி​யம்​மா’, ‘உணர்ச்​சிகள்’ ஆகிய படங்​களை இயக்​கியுள்ள அவர், ‘மைக்​கேல்​ராஜ்’, ‘உளவுத்​துறை’, உட்பட பல படங்​களில் குணச்​சித்​திர வேடங்​களில் நடித்​துள்​ளார்.

சென்​னை, செங்​கல்​பட்டு விநி​யோகஸ்​தர்​கள் சங்​கத் தலை​வர் உள்​ளிட்ட பதவி​களை வகித்​துள்​ளார். அவர் திடீரென தற்​கொலை செய்​து​கொண்​டது, திரைத்​துறை​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தியுள்​ளது.

தலைவர்கள் இரங்கல்

கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.