惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
IT之家
IT之家
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
aimingoo的专栏
aimingoo的专栏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
月光博客
月光博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog RSS Feed
MongoDB | Blog
MongoDB | Blog
雷峰网
雷峰网
博客园 - 聂微东
N
Netflix TechBlog - Medium
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விசிகவில் இருந்து விலகியது ஏன்? - முன்னாள் எம்எல்ஏ பனையூர...
செய்திப்பிரிவு · 2026-05-25 · via hindutamil

Updated on: 

சென்னை: தவெக அமைச்​சர​வை​யில் பங்​கேற்​பு, திரு​மாவளவனின் தடு​மாற்​றம் உள்​ளிட்ட காரணங்​களால் விசிக முன்​னாள் எம்​எல்ஏ பனையூர் பாபு கட்​சியி​லிருந்து வில​கு​வ​தாக அறி​வித்​து உள்​ளார்.

2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் செய்​யூர் தொகு​தி​யில் விசிக சார்​பில், அக்​கட்​சி​யின் ஊடகப் பிரிவு முதன்​மைச் செய​லா​ளர் பனையூர் பாபு போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். 2026 தேர்​தலில் அவர் போட்​டி​யி​டாத நிலை​யில் தற்​போது விசிக​வில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட சமூக வலைத்​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சமீப காலங்​களாக விசிக தலை​வர் திரு​மாவளவனின் செயல்​பாடு​களும், அரசி​யல் நிலைப்​பாடு​களும் எனக்​குப் பெரும் வியப்​பை​யும் வேதனையை​யும் அளிக்​கின்​றன. ஒரு தெளி​வான நிலைப்​பாடின்​றி, அடிக்​கடி தடு​மாறு​வது அவரது இயல்​பல்ல.

நேற்று ஒரு நிலைப்​பாடு, இன்று தொலைக்​காட்சி நேர்​காணலில் ஒரு நிலைப்​பாடு, நாளை செய்​தி​யாளர் சந்​திப்​பில் வேறொரு நிலைப்​பாடு, மீண்​டும் இரவில் சமூக வலைத்தள நேரலை​யில் முற்​றி​லும் முரணான ஒரு நிலைப்​பாடு எனத் தொடர்ந்து முன்​னுக்​குப் பின் முரணாகப் பேசுவது, அரசி​யல் களத்​தி​லும் தொண்​டர்​களிடையே​யும் பெரும் குழப்​பத்தை உரு​வாக்​கு​கிறது.

நேற்று வரை ஒரு நடிகரை ஆர்​எஸ்​எஸ் மற்​றும் பாஜக பெற்​றெடுத்த பிள்ளை என்று கடுமை​யாக விமர்​சித்த அவர், இன்று அதே பிள்​ளை​யைத் தத்​தெடுப்​பது போல் நிலைப்​பாடு எடுப்​பது, அவர் இது​காலம் வரை சமரசமின்றி கட்​டிக்​காத்த கொள்​கை​களி​லும், கருத்​தி​யலிலும் தடம் மாறத் தயா​ராகி​விட்​டார் என்​ப​தையே அப்​பட்​ட​மாக வெளிப்​படுத்​துகிறது.

விசில் அடிப்​பவர்​கள் எல்​லாம் திரையரங்​கத்​துக்​குத்​தான் செல்ல வேண்​டும், சட்​டப்​பேர​வைக்கு வரக் கூடாது. அவர்​கள் பெரி​யாரும், அம்​பேத்​கரும் பேசிய அரசி​யலை​யும், கொள்​கைகளை​யும் வீழ்த்​து​வதற்கு வந்​தவர்​கள் என்று சூளுரைத்த அவர், இன்று அவர்​களு​டனே கைகோர்க்​க​வும், இயக்​கத்​தின் கொள்​கையை மழுங்​கடிக்​க​வும் முற்​படு​வது முரண்​பாட்​டின் உச்​ச​மாகும். ஆட்சி அதி​காரங்​கள் வரும், போகும்.

அது நிலை​யற்​றது. அரசி​யல் தளத்​தில், மக்​கள் சித்​தாந்​தங்​களை விடக் கவர்ச்​சி​யின் பின்​னால் ஈர்க்​கப்​படு​வது ஆபத்​தானது என்று அம்​பேத்​கர் கடுமை​யாக எச்​சரித்​துள்​ளார். ஆனால், இன்று அந்த அபாயகர​மான திசை​யில்​தான் பயணித்​துக் கொண்​டிருக்​கிறோமோ என அஞ்​சுகிறேன்.

கொண்ட கொள்​கை​யிலும், எடுக்​கும் நிலைப்​பாட்​டிலும் உறு​தி​யாக இல்​லாமல், அடிக்​கடி நிலைப்​பாடு​களை மாற்​றி, குழப்​பத்​தி​லும் அவநம்​பிக்​கை​யிலும் செயல்​படும் ஒரு தலை​மை​யின் கீழ், இனி​யும் என்​னால் பயணிக்க இயலாது என எனது மனசாட்சி உணர்த்​துகிறது.

எனவே, விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சியி​லிருந்​தும், அடிப்​படை உறுப்​பினர் பொறுப்​பிலிருந்​தும் முழு​மை​யாக விலகு​கிறேன். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்.