惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
U
Unit 42
腾讯CDC
爱范儿
爱范儿
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
Blog — PlanetScale
Blog — PlanetScale
N
Netflix TechBlog - Medium
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
GbyAI
GbyAI
T
The Blog of Author Tim Ferriss
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இபிஎஸ், சி.வி.சண்முகம் தரப்பினர் பேரவைத் தலைவருடன் சந்திப்பு
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் சி.​வி.சண்முகம் தரப்​பினர் தனித்​தனி​யாக பேர​வைத் தலை​வரை சந்​தித்து உரிமை கோரி​யுள்ள நிலை​யில், அதி​முகவை தனது கட்​டுப்​பாட்டுக்​குள் கொண்டுவர சசிகலா தரப்பும் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்​தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.​வி.சண்​முகம், வேலுமணி, விஜய​பாஸ்​கர் ஆகியோர் இணைந்து ஒரு அணியை உரு​வாக்​கி​னர்.

சட்​டப்​பேரவையில் அதி​முக குழு தலை​வ​ராக எஸ்​.பி. வேலுமணி​யை​யும் தேர்வு செய்​தனர். இதற்​கிடையே, பழனி​சாமியை சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ராகத் தேர்வு செய்து அவரது தரப்​பினர், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக இருந்த கருப்​பை​யா​விடம் கடிதம் வழங்​கினர்.

அதைத்​தொடர்ந்​து, தமிழக அரசு மீதான நம்​பிக்கை வாக்கெடுப்​பில் அரசுக்கு ஆதர​வாக சண்​முகம் தரப்​பினர் வாக்​களித்தனர். இதையடுத்து வேலுமணி, சண்​முகம், விஜய​பாஸ்​கர் உள்ளிட்​டோரின் மாவட்​டச் செயலாளர் பதவியைப் பறித்து பழனி​சாமி உத்​தர​விட்​டார்.

இதையடுத்து சென்னை ராயப்பேட்​டை​யில் உள்ள அதி​முக அலு​வல​க​மான எம்​ஜிஆர் மாளி​கையை சண்​முகம் தரப்பு கைப்​பற்ற முயற்​சிப்​ப​தாகத் தகவல் வெளி​யானது. இதனால் நூற்​றுக்​கணக்​கான போலீ​ஸார் அங்கு குவிக்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து செய்​தி​யாளர்களிடம் பேசிய சி.​வி.சண்​முகம்,‘‘அ​தி​முக தலைமை அலுவல கத்தை கோயி​லாகவே நினைத்துக் கொண்​டிருக்​கிறோம். எந்​தச் சூழ்​நிலை​யிலும் எந்​த​வித பாதிப்​பும் ஏற்​படுத்த அனு​ம​திக்க மாட்​டோம். சட்​டப்​படி அதி​முகவின் உண்​மை​யான தொண்​டர்கள் நாங்​கள் என்​பதை நிரூபித்த பிறகு​தான் அங்கே எங்​கள் கால்​கள் பதி​யும்’’ என்​றார்.

இதற்​கிடையே பசுமை வழிச்சாலை​யில் உள்ள பழனிசாமியின் வீட்​டில் நேற்று ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. பின்​னர், பழனி​சாமி தரப்பு எம்​எல்​ஏக்களான தளவாய் சுந்​தரம், அக்ரிகிருஷ்ண​மூர்த்திஆகியோர் பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகரை சந்​தித்​தனர்.

அப்போது, ‘‘அ​தி​முக கொற​டாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்​பட்​டதைத்​தான் அங்​கீகரிக்க வேண்​டும்.சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த எம்​எல்​ஏக்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’' என கோரிக்கை விடுத்​தனர்.

இதே​போல் சண்​முகம் தரப்பு எம்​எல்​ஏக்​கள் விஜய​பாஸ்​கர், காம​ராஜ் ஆகியோ​ரும் பேரவைத் தலை​வரை சந்​தித்​து, ‘‘எங்​கள் தரப்பு சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் ஆதர​வுடன் சட்​டப்​பேர​வைக் குழுத் தலைவராக வேலுமணி​யும், கொறடாவாக விஜய​பாஸ்​கரும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என கோரிக்கை வைத்​தனர். பிறகு செய்​தி​யாளர்​களிடம் விஜய​பாஸ்​கர் கூறும்​போது, ‘‘சட்​டப்​பேர​வை​யில் பெரும் பான்மை ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்​கள்​தான் சட்​டப்​பேரவைத் தலை​வ​ராக​வும், கொறடாவாக​வும் இருக்க வேண்​டும்.

தற்போது எங்​கள் தரப்​பில் இருக்​கும் 25 எம்​எல்ஏக்களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும்” என்றார். இதற்​கிடையே ஆளுநரை சந்​திப்​ப​தற்​கான முயற்​சி​யில் பழனி​சாமி தரப்பு ஈடு​பட்டு வருகிறது.

அப்​போது, ‘தவெக ஆட்சி அமைப்​ப​தில் குதிரை பேரம் நடந்துள்​ளது. எனவே இந்த விவகாரத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்' என புகார் மனு அளிக்கதிட்​ட​மிட்​டுள்​ள​தாகக் கூறப்​படுகிறது.

இத்​தகைய சூழலில், அதி​முகவை தனது கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டுவரும் வேலைகளில் சசிகலா தரப்பில் காய்​கள்நகர்த்​தப்பட்டு வரு​வ​தாக​வும்​ தகவல்​ வெளி​யாகி உள்​ளது.