




















இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் கடந்தாண்டு மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, சி.திருமகள் சந்திரசேகர், டி.லிங்கேஸ்வரன், கே.பால தண்டாயுதம், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர்களாக பணியாற்றிய என்.ரமேஷ், ரஜினிஷ் பதியில், வழக்கறிஞர் ஜி.கே.முத்துக்குமார், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கே.கோவிந்த ராஜன், புதுச்சேரி மாநில அரசு வழக்கறிஞராக பதவி வகித்த எஸ்.ரவிக்குமார், ஏற்கெனவே சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி வகித்த ஆர்.அனிதா மற்றும் வழக்கறிஞர்கள் இ.மனோகரன், என்.திலீப்குமார், கே.அப்பா துரை ஆகிய 10 பேரின் பெயர்களும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。