惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
量子位
Jina AI
Jina AI
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
IT之家
IT之家
美团技术团队
雷峰网
雷峰网
爱范儿
爱范儿
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து லக்னோ அணியை மீட்பாரா ரிஷ...
2026-05-04 · via hindutamil

Updated on

2 min read

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்றன.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 4 புள்ளிகள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை ஏறக்​குறைய இழந்​துள்ள மும்பை அணி எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் கணிச​மான வெற்​றியை பெற்று கவுர​வமான வகை​யில் தொடரை நிறைவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

சூர்​யகு​மார் யாதவ், ஹர்​திக் பாண்​டியா ஆகியோரின் மோச​மான பார்ம் அணி​யின் ஒட்​டுமொத்த செயல் திறனை​யும் வெகு​வாக பாதித்​துள்​ளது. ஹர்​திக் பாண்​டியா நடப்பு சீசனில் 146 ரன்​கள் மட்டுமே சேர்த்​துள்ள நிலை​யில் பந்​து​வீச்​சில் 4 விக்​கெட்​கள் மட்டுமே கைப்​பற்றி உள்​ளார். சூர்​யகு​மார் யாதவ் 186 ரன்​கள் எடுத்​துள்​ளார். முன்​னாள் கேப்​ட​னான ரோஹித் சர்மா காயத்​தால் அவதிப்​பட்டு வரு​வதும் பின்​னடை​வாக உள்​ளது.

இது ஒரு​புறம் இருக்க ஹர்​திக் பாண்​டி​யா​வின் தலை​மைப்​பண்பு குறித்த கேள்வி​களும் மேலோங்கி உள்​ளன. களத்​தில் வியூகங்களை அமைப்​ப​தி​லும், வீரர்​களின் திறனை கையாள்வதிலும் ஹர்​திக் பாண்​டியா திறம்பட செயல்படுவதில்லை என்ற கருத்து அதி​கரித்​துள்​ளது.

அதேவேளை​யில் இந்​திய டி 20 அணி​யின் கேப்​ட​னான சூர்யகுமார் யாதவ் மந்​த​மான நிலை​யைச் சந்​தித்து வரு​கிறார். தற்​போதைய சூழலில், அவர் முற்​றி​லும் ஃபார்​மில் இல்​லாமல் இல்லை. அதே சமயம், நிதான​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தும் அளவுக்கு அதிக நேரம் களத்​தில் நின்று விளை​யாட​வும் முடியாமல் தவித்து வரு​கிறார்.

குறிப்​பாக, வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக சூர்​யகு​மார் எதிர்​கொள்​ளும் சவால்​கள் இப்​போது உன்​னிப்​பாகக் கவனிக்கப்படு​கின்​றன. இந்த சீசனில் வேகப்​பந்து வீச்சாளர்களுக்கு எதி​ராக அவரது பேட்​டிங் சராசரி 10-க்​கும் சற்று அதி​க​மாக மட்​டுமே இருப்​பது கவலை​யளிக்​கிறது.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியும் இந்த சீசனில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவில்​லை. அந்த அணி 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று கடைசி இடத்​தில் உள்​ளது. அந்த அணி இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 6 ஆட்டங்​களி​லும் வெற்றி பெற்​றால் மட்​டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்​பில் நீடிக்க முடி​யும்.

லக்னோ அணி தனது முதல் போட்​டியை தோல்​வி​யுடன் தொடங்கினாலும், அடுத்​தடுத்த இரண்டு வெற்​றிகளின் மூலம் மீண்​டெழுந்​தது. அதன்​பிறகு அவர்​கள் உத்​வேகத்​துடன் செயல்​படு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​பட்ட நேரத்​தில், அவர்​களது அதிர்ஷ்டம் சரி​யத் தொடங்​கியது. அவர்​களது பந்​து​வீச்​சாளர்​கள் ஒரு குழு​வாகச் சிறப்​பாகச் செயல்​பட்ட போதி​லும், பேட்​ஸ்​மேன்களின் சுமா​ரான ஆட்​டம் அந்த வெற்​றிகளைத் தக்​கவைக்க முடி​யாமல் போனது.

இதன் விளை​வாக அந்த அணி தொடர்ச்​சி​யாக 5 ஆட்​டங்​களில் தோல்வி​களை சந்​தித்​தது. கடைசி​யாக கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் மோஷின் கான் அபார​மாக பந்​து ​வீசி 23 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஆனால் சூப்​பர் ஓவர் வரை சென்ற அந்த ஆட்​டத்​தில் பார்​மில் இல்லாத நிக்​கோலஸ் பூர​னால் லக்னோ அணி தோல்​வியை சந்தித்தது.

தொடர்ச்​சி​யான தோல்வி​களால் கேப்​டன் ரிஷப் பந்த் இக்​கட்​டான நிலை​யில் உள்​ளார். பொது​வாகவே குறுகிய வடிவி​லான கிரிக்கெட் போட்​டிகளில் ரிஷப் பந்த்​தின் ஆட்​டத்​திறன் குறித்​துப் பல்​வேறு கேள்வி​கள் எழுப்​பப்​பட்டு வரு​கின்​றன. இதனால் தனிப்பட்ட வகை​யில் தனது பேட்​டிங்கை முன்​னேற்ற வேண்​டிய நிலை​யிலும், அணி​யின் சூழலை மாற்​றியமைக்க வேண்​டிய சவாலை​யும் அவர் எதிர்​கொண்​டுள்​ளார். அடுத்த ஏழு நாட்​களில்​ மூன்​று முக்​கிய​மான போட்​டிகளில்​ லக்​னோ அணி ​விளை​யாட உள்​ளது.