惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
B
Blog
博客园_首页
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
V
V2EX
U
Unit 42
I
InfoQ
IT之家
IT之家
博客园 - 司徒正美
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 ரன்​கள் - வைபவ் சூர்யவன...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

ஜெய்ப்​பூர்: ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 மற்​றும் அதற்கு அதி​க​மாக ரன்​கள் குவித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் வைபவ் சூர்யவன்ஷி படைத்​தார்.

நேற்று முன்​தினம் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் லக்னோ அணியை வென்​றது. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் வீரர் வைபவ் சூர்​ய​வன்ஷி 38 பந்​துகளில் 93 ரன்​களை (10 சிக்​ஸர், 7 பவுண்​டரி) விளாசித் தள்​ளி​னார். இதன்​மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்​பட்ட ரன்​களைக் குவித்த இளம் வயது வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்​ய​வன்ஷி எட்​டி​னார். 15 வயதிலேயே இந்த சாதனையை அவர் எட்​டி​யுள்​ளார்.

இதற்கு முன்பு 2018-ல் டெல்லி டேர்​டெ​வில்ஸ் அணிக்​காக விளையாடிய ரிஷப் பந்த், குறைந்த வயதில் 500 அல்​லது அதற்கு மேற்​பட்ட ரன்​களைக் குவித்த இளம் வீரர் என்ற சாதனையைச் செய்​திருந்​தார். அப்​போது ரிஷப் பந்த்து​க்கு வயது 20 ஆகும். தற்​போது அந்த சாதனையை, வைபவ் சூர்​ய​வன்ஷி முறியடித்துள்ளார். மேலும், ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்​லது அதற்கு அதி​க​மான ரன்​களைக் குவித்​தவர்​கள் பட்​டியலில் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை (236.3) வைபவ் சூர்​ய​வன்ஷி வைத்துள்​ளார்.

இந்த வரிசை​யில் 2-வது இடத்​தில் 2019-ல் ஆந்த்ரே ரஸ்​ஸல் (204.8 ஸ்டிரைக் ரேட்), 3-வது இடத்​தில் 2026-ல் அபிஷேக் சர்மா (202.0 ஸ்டிரைக் ரேட்), 4-வது இடத்​தில் 2025-ல் நிக்​கோலஸ் பூரன் (196.2 ஸ்டிரைக் ரேட்), 5-வது இடத்​தில் 2024-ல் டிரா​விஸ் ஹெட் (191.2 ஸ்டிரைக் ரேட்), 6-வது இடத்​தில் 2014-ல் கிளென் மேக்​ஸ்​வெல் (187.7 ஸ்டிரைக் ரேட்) ஆகியோர் அதற்கு அடுத்த இடங்​களில் உள்ளனர்.

மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்​ஸர்​கள் விளாசி​ய​வர்​கள் வரிசை​யில் 2-வது இடத்தை சூர்​ய​வன்ஷி பிடித்​துள்​ளார். இந்த ஆண்​டில் இது​வரை அவர் 53 சிக்​ஸர்​களை விளாசி​யுள்​ளார். இந்தப் பட்​டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்​தில் உள்​ளார். அவர் 2012 சீசனில் 59 சிக்​ஸர்​களை அடித்​திருந்​தார். 2019-ல் ஆந்த்ரேரஸ்ஸல் 52 சிக்​ஸர்​களை​யும், 2013-ல் கிறிஸ் கெயில் 51 சிக்​ஸர்​களை​யும், 2022-ல் ஜாஸ் பட்​லர் 45 சிக்​ஸர்​களை​யும், 2011-ல் கிறிஸ் கெயில் 44 சிக்​ஸர்​களை​யும், 2024-ல் அபிஷேக் சர்மா 42 சிக்​ஸர்​களை​யும் விளாசி அதற்கு அடுத்த இடங்​களைப் பிடித்துள்ளனர்.