惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
博客园_首页
WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
云风的 BLOG
云风的 BLOG
博客园 - 司徒正美
Engineering at Meta
Engineering at Meta
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
N
Netflix TechBlog - Medium
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க முடிவு: பயணிகள் பாதுகா...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: இந்​திய ரயில்​வே​யில் மொத்​தம் உள்ள 14.80 லட்​சம் பணி​யாளர்​கள் எண்​ணிக்​கை​யில், 2 சதவீதம் பணி​யாளர்​களை குறைக்க ரயில்வே வாரி​யம் முடிவு செய்​துள்​ளது. இவற்​றில், தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1,906 பணி​யாளர்​கள் குறைக்​கப்பட உள்​ளனர். இது பயணி​களின் பாது​காப்பை கேள்விக்​குறி​யாக்​கும் என்று ரயில்வே ஊழியர் சங்​கத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​தி​யா​வில் சாமானிய மக்​கள் முதல் வசதி படைத்​தவர்​கள் வரை அனை​வருக்​கும் ஏற்ற ஒரு பொதுப்​போக்​கு​வரத்து அமைப்​பாக, ரயில் போக்​கு​வரத்து திகழ்​கிறது. குறைந்த கட்​ட​ணம், பாது​காப்​பான பயணம், நீண்ட தூர பயணத்​துக்கு ஏற்​றது போன்ற காரணங்​களால் ரயில்​களில் தினசரி கோடிக்​கணக்​கான மக்​கள் பயணிக்​கின்​றனர்.

இந்​தி​யா​வில் ஆயிரக்​கணக்​கான வழித்​தடங்​களில் 13,000 பயணி​கள் ரயில்​கள் உள்பட தினசரி 22 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​கள் இயக்​கத்​தில் லட்​சக்​கணக்​கான பணி​யாளர்​கள் முக்​கியப் பங்​காற்றி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்​திய ரயில்​வே​யில் மொத்​த​முள்ள 14 லட்​சத்து 80 ஆயிரத்து 455 பணி​யாளர்​களில் 2 சதவீதம், அதாவது, 29,608 பணி​யாளர்​களை ரயில்வே நிர்​வாகம் குறைக்க முடிவு செய்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் மட்​டும் 1,906 பணி​யிடங்​களும், சென்னை ஐ.சி.எஃப்​-ல் 217 பணி​யிடங்​களும் குறைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

புதிய பாதை, இரட்டை பாதை மற்​றும் மின்​மய​மாக்​களு​டன் புதி​ய​பாதை அமைக்​கப்​படு​கிறது. இப்​பாதைகளில் வந்தே பாரத், அம்​ரித் பாரத் உள்பட பல்​வேறு நவீன சொகுசு ரயில்​கள் இயக்​கு​வது அதி​கரிக்​கிறது. இந்த ரயில்​களை இயக்​க​வும், ரயில் பாதையை பராமரிக்​க​வும் அதிக பணி​யாளர்​கள் தேவைப்​படும் நிலை​யில், நிர்​வாகச் செல​வு​களை குறைக்​கும் வித​மாக, பணி​யாளர்​கள் குறைப்பு நடவடிக்கை ரயில்வே வட்​டாரத்​தில் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

போதிய பணி​யாளர்​கள் இல்​லாத சூழலில், தற்​போதுள்ள ஊழியர்​களுக்​குப் பணிச்​சுமை அதி​கரிப்​ப​தோடு, ரயில்​களின் இயக்​கம் மற்​றும் பராமரிப்​புப் பணி​களில் தொய்வு ஏற்​படக்​கூடும் என்​றும், இது பயணி​களின் பாது​காப்​பைக் கேள்விக்​குறி​யாக்​கும் என்​றும் ஓய்வு பெற்ற ரயில்வே அதி​காரி​கள் மற்​றும் ரயில்வே ஊழியர்​கள் சங்க நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்​து, ஓய்​வு​பெற்ற ரயில்வே தொழிற்​சங்க தலை​வர் மனோகரன் கூறிய​தாவது: சிக்கன நடவடிக்​கைக்​காக இதை எடுத்​துள்​ளார்​கள். இது சரி​யான நேரம் அல்ல. வந்தே பாரத் ரயில் உட்பட புதிய ரயில்​களை அறி​முகப்​படுத்தி வரு​கின்​றனர். அதி​க​மான சிறப்பு ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

கூடு​தல் பணி​யாளர்​கள் தேவை 98 சதவீதம் அகலப்​பாதை மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ளது. இரட்​டைப்​பாதையை அதி​கப்​படுத்​தி​யுள்​ளனர். இப்​பாதைகளை பராமரிக்க கூடு​தல் பணி​யாளர்​கள் தேவைப்​படு​கின்​றனர்.

எனவே, ஊழியர்​கள் எண்​ணிக்கையை அதி​கரிக்க வேண்​டிய சூழல் உள்​ளது. இந்​நேரத்​தில் எண்​ணிக்கையை குறைப்​பதை ரயில்வே துறை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். பணி​யாளர்​கள் எண்​ணிக்கையை அதி​கரிக்க வேண்​டுமே தவிர, குறைக்​கக்​கூ​டாது. இது பாது​காப்​புக்​கு உகந்​தது அல்​ல. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.