惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
博客园 - Franky
Microsoft Security Blog
Microsoft Security Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
H
Help Net Security
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘ஏமாற்றும்’ விதமாக பயிர்க் கடன் தள்ளுபடி - விஜய் அரசு மீத...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

Updated on: 

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விவசாய சங்கங்கள் மற்றும் பாமக தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

பாமக தலைவர் அன்புமணி: கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும் கூட விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்கக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவருக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் கடனில் 50 சதவீதமும் கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி கூறிவிட்டு, தற்போது விவசாயிகளை ஏமாற்றும் விதமாக இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

சிறு, குறு விவசாயிகள் இரண்டரை ஏக்கர் கடன் பெற்றிருந்தாலே ரூ.91,250 வருகிறது. இதை முழுவதுமாக தள்ளுபடி செய்தால் மட்டுமே தான் விவசாயிகளுக்கு ஓரளவு கடனில் இருந்து மீள முடியும். எனவே, முதல்வர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்: தமிழக அரசின் அறிவிப்பு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளது. வேளாண் உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசு கட்டுப்படியான ஆதார விலையை அறிவிக்காத நிலையில் பெரும் பகுதி விவசாயிகள் கடனாளிகளாக மாறியுள்ளனர். எனவே, 5 ஏக்கருக்குட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.ஆர்.பாண்டியன்: இந்த அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள் தனது நிதியில் இருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதல்வர் உணரவேண்டும்.

கடந்த காலங்களை பின்பற்றிகடன் வசூல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான புதிய கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி, நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். தற்போதைய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.