惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
小众软件
小众软件
量子位
MongoDB | Blog
MongoDB | Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
H
Help Net Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விண்வெளியில் இருந்து கிராமங்களை ‘மேப்பிங்' செய்த இஸ்ரோ
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ​விண்​வெளி​யில் இருந்து இந்​தி​யா​வின் ஒவ்​வொரு கிராமத்​தை​யும் மிகத் துல்​லிய​மாக வரைபட​மாக்​கும் முக்​கிய திட்டத்தை இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) வெற்​றிகர​மாக நிறைவு செய்​துள்​ளது.

இது தொடர்​பான அறி​விப்பை தேசிய ஊராட்​சிகள் தின​மான கடந்த வெள்​ளிக் ​கிழமை இஸ்ரோ வெளி​யிட்​டது. நாடு முழுவதற்கு​மான உயர்​-தெளிவுத்​திறன் கொண்ட நிலப் பயன்பாடு மற்​றும் நிலப்​பரப்பை 1:10000 என்ற விகிதத்​தில் வரைபடம் செய்து முடித்​துள்​ள​தாக இஸ்ரோ அறி​வித்​தது. அதாவது வரைபடத்​தில் உள்ள 1 செ.மீ என்​பது தரை​யில் வெறும் 100 மீட்​டரைக் குறிக்​கும். இது ஒரு நெல் வயலுக்​கும் குளத்​துக்​கும் இடையி​லான வித்​தி​யாசத்தை துல்​லிய​மாக வேறு​படுத்​திக் காட்டும் அளவுக்​குத் தெளி​வானது.

2011ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி, இந்தியாவில் 6,49,481 கிராமங்​கள் இருந்​தன. இந்த செயற்​கைக் ​கோள் தரவை அரசு நிறு​வனங்​களுக்கு இஸ்ரோ வழங்​கி​யுள்​ளது.

இது தொடர்​பாக இஸ்ரோ எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதிவில், "இந்​தத் தரவுத்​தொகுப்பு கிராமப் பஞ்​சா​யத்து மேம்பாட்டுத் திட்​டங்​களுக்​குத் துணைபுரிவதுடன், பஞ்​சா​யத்து ராஜ் அமைச்​சகத்​தின் ‘கி​ராம் மஞ்​சித்​ரா' (கி​ராம வரைபடம்) இணை​யதளத்​தில் உள்ள தகவல் பிரிவு​களில் ஒன்​றாக ஒருங்கிணைக்​கப்​பட்​டுள்​ளது. இது கிராமப்​புற அளவில் வலு​வான, தரவு சார்ந்த நிர்​வாகத்தை சாத்​தி​ய​மாக்​கு​கிறது” என்று தெரிவித்துள்​ளது.

கிராம் மஞ்​சித்ரா இணை​யதளம், உள்​ளாட்சி அமைப்​பு​கள் தரவு சார்ந்த வளர்ச்சி முடிவு​களை எடுக்க உதவும் வகை​யில் வடிவமைக்​கப்​பட்​டுள்​ளது. கிராமங்​களை வரைபட​மாக்​கு​வது, கிராமப் பஞ்​சா​யத்து மேம்​பாட்​டுத் திட்​டங்​களைச் சிறப்​பாகத் தயாரிப்​ப​தற்கு உதவும்.

இது தரவு அடிப்​படையி​லான முடிவெடுக்கும் முறையை சாத்​தி​ய​மாக்​கு​வதுடன், நில வளங்களை​யும் அவற்​றின் பயன்​பாட்டு முறை​களை​யும் கண்டறிய உதவும். ஒட்​டுமொத்​த​மாக, இந்​தி​யா​வின் கிராமப்​புறங்​களில் அரசுத் திட்​டங்​களைச் செயல்​படுத்​து​வ​தில் வெளிப்படைத்​ தன்​மை​யை​யும் பொறுப்​புடைமை​யை​யும் இது மேம்​படுத்​தும். மேலும் அடிமட்​ட அளவில்​ ஜனநாயகத்​தை வலுப்படுத்​தும்​.