惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 三生石上(FineUI控件)
博客园_首页
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
博客园 - 叶小钗
S
SegmentFault 最新的问题
雷峰网
雷峰网
H
Help Net Security
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
IT之家
IT之家
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
DataBreaches.Net
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர...
செய்திப்பிரிவு · 2026-05-26 · via hindutamil

Updated on: 

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல, ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதிவரை பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அரசு கடன் தள்ளுபடி திட்டங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2025 நவ.28-ம் தேதி வெளியிட்ட மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படியும், பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழு தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தின் இன்றைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, இக்கட்டான இந்த சூழலிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதி வரை பெற்றபயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

அந்த வகையில், ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 100 சதவீதமும், ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறுவிவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

எதிர்வரும் சாகுபடி பருவத்துக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2.50 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் குறு விவசாயிகள் என்றும், 2.51 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள் என்றும், 5.10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன் அளிக்கக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.