惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
C
Check Point Blog
博客园 - 【当耐特】
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
The Cloudflare Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Vercel News
Vercel News
IT之家
IT之家
MyScale Blog
MyScale Blog
博客园_首页
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-05-29 · via hindutamil

Updated on: 

அளவான ஆசையும் குறைவான தேவையும் நிறைவான வாழ்க்கைக்கு வழி என்பதை உணர்ந்து எப்போதும் எதார்த்தமான வாழ்க்கையை வாழும் தனுசு ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 2 முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார். எட்டில் சென்று மறைவதால், எந்த செயலையும் நிதானத்துடன் கையாண்டாலே போதும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்து தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். எனினும் கணவன் - மனைவிக்குள் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும். வரவு மிஞ்சிய செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் கேட்டுவிட்டார்களே என்று கையிருப்பைக் கரைக்காதீர்கள்.

பேச்சிலும் செயலிலும் நிதானம் அவசியம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். வீண் பழிகள், அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். திடீர் பயணங்கள் இருக்கும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்:

குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், கம்பீரமாக பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவீர்கள்.

குரு பகவான் 4-ம் இடத்தைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்து வந்த மருந்து மாத்திரைச் செலவுகள் இனி படிப்படியாகக் குறையும். அவர் வழிச் சொத்து கைக்கு வரும். சிலர் பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உடல் சோர்வு, வீண் அலைச்சல், டென்ஷன் விலகும்.

குரு பகவான் 12-ம் இடத்தைப் பார்ப்பதால், மறைமுகப் பணவரவு இருக்கும். அரசு காரியங்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். திடீர்ப் பயணங்கள் கூடி வரும். அதன் மூலம் ஆதாயமும் உண்டு. அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் ராசிநாதனான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் உங்களின் தனித்திறமை வெளிப்படும். புதிய கோணத்தில் பிரச்சினைகளை கையாண்டு தீர்வு காண்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

தன - தைரியாதிபதியுமான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இழந்த தொகை கைக்கு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். சொந்த ஊரில் மதிப்பு கூடும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு யோக காலமாக அமையும். புதிய தொழிலதிபர்கள் வெற்றி பெறுவார்கள்.

பாதக - ஜீவனாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்து வழக்கில் அனைவரையும் அரவணைத்துச் செல்வது நல்லது. பேச்சில் கவனம் காக்கவும். யாரை மனதையும் புண்படுத்தும்படி பேசவோ, செயல்படவோ வேண்டாம்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வதால் தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகள் உடனே முடியும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் வரக்கூடும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் அதிக பாரம் சுமக்க வேண்டாம். வீட்டில் முதியவர்களுக்கு மரியாதை கொடுக்கவும். சாலையைக் கடக்கும்போது கவனமாக இருக்கவும். பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி புரிவது நன்மை தரும்.

வியாபாரம், உத்தியோகம்:

வியாபாரத்தில் திடீர் லாபத்தால் திக்குமுக்காடுவீர்கள். நவீன விளம்பர யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். சிலர், பழைய கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். ஹோட்டல், ரியல் எஸ்டேட், வாகன உதிரி பாகங்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தி விடுங்கள். கூட்டுத்தொழிலில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். அதேசமயம் சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிய வாய்ப்புகள் வந்தால் யோசித்து முடிவெடுங்கள். கணினித் துறையினருக்கு சலுகைகள் கிடைக்கும். கண் பார்வைக் கோளாறு, முதுகுத் தண்டில் வலி வரும். கலைஞர்கள் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள். இந்த குருப்பெயர்ச்சி சிந்தித்து செயல்பட்டு சாதிக்கும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் 12 கி.மீ தொலைவில் உள்ள பொன்செய் - திருநனிபள்ளி நற்றுணையப்பர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். எதிலும் நன்மையே கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.